கையில கொத்து கொத்தா முடி வருவதை நிறுத்த வெறும் வெந்தயம் மட்டும் போதும்..!

Advertisement

How to Prevent Hair Fall at Home 

இன்றைய காலத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என யாருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இல்லை என்று கூற முடியாது. அப்படி யாராவது கூறினாலும் கூட அது 1 அல்லது 2 நபர்கள் மட்டுமே தான். இத்தகைய முடி உதிர்வு பிரச்சனையை நாம் கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் அதன் பின் விளைவு அதிகமாகி தலையில் ஒரு முடி கூட இல்லாமல் போகிவிடும். சரி இந்த பிரச்சனையை எப்படி தான் சரிவது என்று கேள்வி அனைவருடைய மனதிலும் தோன்றும். உங்களுடைய கேள்விக்கான பதில் ஆனது இந்த பதிவின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் இன்றைய பதில் கையில் கொத்து கொத்தாக வரும் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி இயற்கையான முறையில் சரி செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதனால் பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வெந்தயம் முடிக்கு:

வெந்தயம் முடிக்கு

வெந்தயத்தினை மைய பொருட்களாக எடுத்துக்கொண்டு அதனுடன் மேல் சில பொருட்களை சேர்த்து எப்படி முடி உதிர்வை நிறுத்தலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பொருட்கள் தேவை:

  • வெந்தயம்- 3 ஸ்பூன் 
  • காய்ந்த நெல்லிக்காய்- 3 ஸ்பூன் 
  • முட்டை (அ) விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன் 

வெயிலால் முகம் கருத்து விட்டதா.. அப்போ இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்க.. 

முடி உதிர்வை உடனடியாக நிறுத்துவது எப்படி..?

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் ஆனது நம்முடைய உடலுக்கு நன்மையினை அளிப்பதோடு மட்டும் இல்லாமல் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வினை அளிக்கிறது.

அதேபோல் நெல்லிக்காய் ஆனது முடி உதிர்வை தடுத்து நிறுத்தி மீண்டும் முடியினை வேகமாக வளர செய்யும்.

அதனால் முதல் நாள் இரவே 3 ஸ்பூன் வெந்தயத்திம் மற்றும் 3 ஸ்பூன் காய்ந்த நெல்லிக்காயினை  தண்ணீரில் தனித்தனியாக ஊற வைத்து விடுங்கள்.

இப்போது மறுநாள் காலையில் எழுந்து மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள பொருட்களை சேர்த்து அதனுடன் வெந்தய தண்ணீரை சேர்த்து நன்றாக சாறு போல அரைத்து கொள்ளுங்கள்.

அடுத்து அரைத்து வைத்துள்ள சாற்றினை ஒரு காட்டன் துணியில் ஊற்றி சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த சாற்றினை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது 2 முட்டையின் வெள்ளை கருவினை சேர்த்து ஒரு 10 நிமிடம் கலந்து கொண்டால் போதும் ஹேர் பேக் தயார்.

பயன்படுத்தும் முறை:

முடி உதிர்வை உடனடியாக நிறுத்துவது எப்படி

இப்போது உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் வைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் நுனி பகுதி முதல் அடிப்பகுதி வரை அப்ளை செய்து விட்டு 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

20 நிமிடம் கழித்து வழக்கம் போல் ஷாம்பு போட்டு தலை குளித்து விடுங்கள். இவ்வாறு செய்தால் போதும் முடி உதிர்வு பிரச்சனை விரைவில் குறைந்து விடும்.

Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement