How To Fasten Hair Growth Home Remedies in Tamil
அதிக வெப்பம் காரணமாக உடலில் ஏற்படும் உடல் சூடு காரணத்தினால் முடி அதிகமாக உதிர்கிறது. அதுமட்டுமில்லாமல் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதாலும் முடி அதிக அளவில் உதிர்கிறது. எனவே இதனை தடுக்கக்கூடிய சில இயற்கையான வழிகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். இக்காலத்தில் பெண்களுக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் தலையில் முடி உதிர்ந்து கொண்டே போவது பெரும்பிரச்சனை. பெண்களுக்கு முடி நீளமாக இருந்தால் தான் அழகு என்று கூறுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு முடி வளரவே வளராது. எனவே அப்படி வளராமல் இருக்கும் முடியையும் அதிகமாக உதிரும் முடியை எப்படி தடுப்பது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி அதிகமாக வளர என்ன செய்ய வேண்டும்.?
வெங்காய சாறு பயன்படுத்தவும்:
வெங்காயச்சாற்றில் கந்தகம் உள்ளது. இது முடியின் வேர்கால்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் வலுவடையவும் செய்கிறது.
அதுமட்டுமில்லாமல், வெங்காயத்தில் முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இதனை நீங்கள் தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
கருவேப்பிலை பயன்படுத்தவும்:
முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதிலும் முடிக்கு கருமை நிறத்தை அளிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பது கருவேப்பிலை தான்.
கறிவேப்பிலையில் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதசத்து, பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளது. இது முடி உதிர்தலை தடுத்து முடியை கருமையாகவும் நீளமாகவும் வளர செய்கிறது.
கருவேப்பிலையை நன்றாக அரைத்து அதிலுள்ள சாற்றினை நன்றாக எடுத்து கொள்ளுங்கள். இதனை உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனிப்பகுதி வரை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முடியை ஷாம்பு போட்டு அலசி விடுங்கள்.
மேலும், கருவேப்பிலையை அரைத்து காயவைத்து அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி வேகமாக வளரும்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் 3 வாரங்களில் உங்களின் முடி உதிர்தல் நின்று முடி அடர்த்தியாக வளர்வதை நீங்களே பார்க்கலாம்.
மசாஜ் செய்யவும்:
கருவேப்பிலை எண்ணெய்யை தலையில் நன்றாக அப்ளை செய்து தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வருவதன் மூலம் முடி வளர்ச்சியினை அதிகப்படுத்தலாம்.
உங்க முகம் எப்போதும் டல்லாவே இருக்கா.. அப்போ நீங்க இத தான் செய்யணும்.. செம ரிசல்ட் கிடைக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |