How To Remove Confusion From Mind
பொதுவாக குழப்பம் என்பது நம் அனைவருக்குமே இருக்கும். குழப்பத்தை, இருமனம் என்று கூறுவார்கள். அதாவது, இந்த வேலைக்கு செல்லலாமா..? அந்த வேலைக்கு செல்லலாமா.? இந்த ட்ரஸ் வாங்கலாமா.? அந்த ட்ரஸ் வாங்கலாமா.? இதுபோன்ற பல குழப்பங்கள் பெரும்பாலானவர்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் ஒருபோதும் தெளிவான முடிவை எடுக்காமல் குழப்பத்துடனே இருப்பார்கள். இந்த குழப்பம் தான் நாளடைவில் பெரிய அளவில் அதிகப்படியான குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்றைக்குமே, ஒரு தெளிவான அல்லது உறுதியான முடிவு எடுப்பதே நம் வாழ்க்கைக்கு நல்லது. ஆனால், பல பேர் எல்லா விஷயத்திலும் மனகுழப்பத்துடனே இருப்பார்கள். எனவே, மனதில் குழப்பத்துடன் இருப்பவர்கள் மன குழப்பத்திலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Reduce Confusion in Mind in Tamil:
பதற்றம் படாமல் இருக்க வேண்டும்:
மனதில் குழப்பம் இருப்பவர்கள் முதலில் ஒரு அமைதியான இடத்தில் அமர வேண்டும். அதன் பிறகு, மனதை ஒருநிலை படுத்தி சிறிது நேரம் மூச்சியினை இழுத்து வெளிவிட வேண்டும்.
தெளிவான முடிவை எடுங்கள்:
உங்கள் மனதில் இரண்டு வகையான குழப்பம் இருக்கிறது என்றால், முதலில் ஒவ்வொன்றாக சிந்தித்து ஒரு தெளிவான முடிவை எடுங்கள். அதாவது, இது நமக்கு இப்போது மட்டுமில்லாமல் எதிர்காலத்திலும் நமக்கு நன்மையை அளிக்குமா.? இதனை நம்மால் செய்ய முடியுமா.? என்று சிந்தித்து முடிவெடுங்கள்.
எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்ன செய்வது
நன்மை தீமைகளை ஆராய வேண்டும்.?
நீங்கள், ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அமைதியாக பொறுமையாக சித்தித்து பார்ப்பதன் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்.
பிறருக்கு தீமை அளிக்கும் விஷயங்களை தவிர்த்து விடுங்கள்:
நீங்கள் ஒருவேளை உங்களுக்கு ஒரு விஷயம் பிடித்திருந்தது மற்றவர்களுக்கு அது தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பிறருக்கு தீமை செய்துவிட்டு நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
எனவே, நீங்கள் எடுக்கும் முடிவு மற்றவர்களை பாதிக்காமல் இருக்குமாறும் பார்த்து கொள்ளுங்கள்.
எடுத்த முடியில் உறுதியாக இருங்கள்:
ஒருமுறை முடிவு எடுத்து விட்டால், அந்த முடிவில் இருந்து மாறாமல் உறுதியாக இருங்கள். ஏனென்றால் நாம் ஏற்படுத்தி கொள்ளும் தன்னம்பிக்கையும் உறுதியும் தான் நம் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
உங்களுக்கு உள்ள மனஅழுத்தத்தை போக்கி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எளிமையான குறிப்பு
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |