How To Remove Dirt From Face Home Remedies
முகத்தில் அழுக்கு இருந்தாலே முகம் கருமையாகவும் பொலிவிழந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் முகத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனை அறியாமல் நாம் அனைவருமே முகம் பொலிவாகவும் பருக்கள் இல்லாமல் இருக்கவும் கடைகளில் விற்கும் பலவிதமான க்ரீம்களை வாங்கி முகத்திற்கு பயன்படுத்துகிறோம். முகத்தில் அழுக்கு நீங்கவில்லை என்றால், எந்தவிதமான க்ரீம் போட்டாலும் முகம் கருமையாகத்தான் இருக்கும். எனவே, உங்கள் முகம் பொலிவிழந்து கருப்பாக இருந்தால் உங்கள் முகத்தில் அழுக்கு உள்ளது என்று அர்த்தம். எனவே, முகத்தில் உள்ள அழுக்கை எவ்வாறு போக்குவது என்பதை தான் இப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளோம்.
அதாவது, முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கக்கூடிய வீட்டு முறைகளை பற்றி தான் பார்ப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Home Remedies To Remove Dirt From Face in Tamil:
தேவையான பொருட்கள்:
- தக்காளி சாறு- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவது எப்படி.?
ஸ்டேப் -1
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில், 2 ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அடுத்து, அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
5 நாட்களில் கழுத்தில் உள்ள கருமை மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!
ஸ்டேப் -3
பிறகு, முகத்தை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி, தயார் செய்து வைத்துள்ள கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
இதனை 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விட்டு பிறகு, குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.
⇒ இம்முறையை நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை கூட செய்து வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம், வெயில் மற்றும் தூசுகளினால் முகத்தில் உண்டாகும் அழுக்கு நீங்கி முகம் பொலிவாகவும் வெண்மையாகவும் இருக்கும்.
கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும்..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |