Best Way To Remove Facial Hair at Home
நாம் அனைவருமே முகத்தை அழகாக வைத்து கொள்ள முகத்திற்கு பல விதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சிலருக்கு எவ்வளவு மேக்கப் போட்டாலும் முகம் பளிச்சென்றே இருக்காது. ஏனென்றால், அவர்கள் முகத்தில் சின்ன சின்னதாக இருக்கும் முடியே அதற்கு காரணம் ஆகும். பெண்களுக்கு முகத்தில் முடி இருந்தாலே முக அழகையே கெடுத்து விடும். இதனை போக்க பெரும்பாலான பெண்கள் பார்லருக்கு சென்று முடிகளை நீக்கி கொள்வார்கள். எனவே, இனி அப்படி செய்ய தேவையில்லை. நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே முகத்தில் உள்ள முடிகளை நீக்கி விடலாம். ஓகே வாருங்கள் அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Remove Facial Hair at Home in Tamil:
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – பாதியளவு
- சோள மாவு – 1 1/2 ஸ்பூன்
- பால் – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- சர்க்கரை – 1/2 ஸ்பூன்
முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு, அதன் பாதியளவை எடுத்து கொள்ளுங்கள். பிறகு, உருளைக்கிழங்கை துருவி எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு மற்றும் பால் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு வடிகட்டியில் சேர்த்து நன்கு பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
இதனுடன் சோள மாவு, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து எடுத்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்தும் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, கரைத்து வைத்த கலவையை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை சூடு படுத்தி எடுத்து கொள்ளுங்கள்.
5 நிமிடத்தில் முகம் பிரைட்டாக இந்த பேஸ் பேக் மட்டும் போதும்
அடுத்து, இதனை நன்கு ஆறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது முகத்தை நன்கு கழுவி துடைத்து விட்டு, ஒரு பிரஷ் பயன்படுத்தி முகத்தில் முடி உள்ள இடங்களில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை அப்படியே வைத்து உலரவிட்டு, அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்து எடுத்து விடுங்கள்.
இறுதியாக, தண்ணீர் விட்டு முகத்தை நன்கு கழுவி துடைத்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அனைத்தும் உதிர்ந்துவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |