முகத்தில் உள்ள முடி உதிர என்ன செய்ய வேண்டும்.?

Advertisement

How To Remove Facial Hair Naturally in Tamil

பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்ந்து இருக்கும். காதுக்கு அருகில், கன்னத்தில் நெற்றியில் குட்டி குட்டியாக முடி வளர்ந்து இருக்கும். இவ்வாறு முடி வளர்வது இயற்கையான ஒன்று என்றாலும், இது முக அழகையே கெடுத்து விடும். எவ்வளவுதான் மேக்கப் போட்டாலும் முடி இருந்தால் முகம் பொலிவாக இருக்காது. இதனால்,முகத்தில் உள்ள முடியை நீக்க பார்லருக்கு செல்வார்கள். ஆனால், பார்லருக்கு போகாமலே வீட்டில் இருந்தே முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எளிதில் நீக்கலாம். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

இயற்கையான பொருட்களை கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவதன் மூலம், சரும பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். ஆகையால், எப்போதும் நமக்கு பக்க விலைவுகளை ஏற்படுத்தாதது இயற்கையான பொருட்கள் மட்டுமே. எனவே, இப்பதிவில் இயற்கையான பொருட்களை கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies for Removing Facial Hair in Tamil:

முகத்தில் உள்ள முடி உதிர

ஓட்ஸ்:

ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 ஸ்பூன் ஓட்ஸை சேர்த்து நன்கு பொடியாக அரைத்துஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை உலர விடவும். அதன் பிறகு, கைகளை பயன்படுத்தி முகத்தை வட்ட இயக்கத்தில் தேய்த்து விடவும். பிறகு, முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை பயன்படுத்தி வருவதன் மூலம் முகத்தில் உள்ள முடிகள் உதிர தொடங்கும்.

கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர்:

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்து கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து எடுத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை உலரவிட்டு அதன் பிறகு, நன்கு தேய்த்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள். இந்த முறையை நீங்கள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வருவதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிரும்.

கண்ணில் உள்ள கருவளையம் நீங்க கிராமத்து ரெமிடி ட்ரை பண்ணுங்க

பால் மற்றும் ஜெலட்டின்:

ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் பால், 3 ஸ்பூன் ஜெலட்டின் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அதன் பிறகு, இதனை நன்கு ஆறவைத்து அதன் பிறகு முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் வரை உலரவிடுங்கள். அடுத்து, நன்கு தேய்த்து விட்டு குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவி விடுங்கள். இந்த முறையை நீங்கள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வருவதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற முடி நீங்கிவிடும்.

👉எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉t.me/pothunalam

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement