How To Remove Pimples Overnight in Tamil
நீங்களோ நானோ யாராக இருந்தாலும் முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதிலும் பெண்கள் பற்றி சொல்லவே வேண்டாம். முகம் எப்பொழுதும் பொலிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் என்று பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் பிரச்சனைகளில் முதலில் இருப்பது முக பருக்கள் தான். பொதுவாக முகப்பருக்கள் வந்தால் அது முக அழகையே கெடுத்துவிடும். அதிலும் பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. அதனால் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி முக பருக்களை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளாலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பருக்கள் காணாமல் போக சீரகம் போதும்..!
நம் அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் உணவு பொருட்களில் ஓன்று தான் சீரகம். இந்த சீரகம் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இந்த சீரகம் முக பருக்களை சரி செய்யும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..?
அதுவும் இந்த சீரகம் ஒரே இரவில் முகத்தில் இருக்கும் பருக்களை மறைய செய்யும் பண்புகளை கொண்டுள்ளது. சரி வாங்க சீரகத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
முதலில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். பின் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துவிடுங்கள். பின் அதில் 4 ஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
ஒரே நாளில் பருக்கள் மறைய மஞ்சளுடன் இதை சேர்த்து தடவுங்க
அதாவது சீரகம் சேர்த்த தண்ணீர் நன்றாக கொதித்து 3 ஸ்பூன் அளவிற்கு வரும் வரை நன்றாக கொதிக்க விடுங்கள்.
சீரக தண்ணீர் நன்றாக வற்றி வந்ததும் அதை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் பருக்களை மறைய செய்யும் பேஸ் பேக் ரெடி.
பயன்படுத்தும் முறை:
இந்த கிரீமை உங்கள் முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். முகத்தை மசாஜ் செய்ய வேண்டாம். 20 நிமிடம் வைத்திருந்து பின் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதுபோல செய்து வந்தால் பருக்கள் மறைவதை நீங்களே காண்பீர்கள்.
கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்க தக்காளி சாறு மட்டும் போதுமா..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |