Remove Spots From Face Naturally in Tamil
நாம் அனைவருமே முகத்தில் கரும்புள்ளி, முகப்பரு போன்றவை இல்லாமல் பார்த்து கொள்ள தான் நினைப்போம். ஆனால் அதிகப்படியான சூரிய ஒளி அல்லது முகப்பரு தழும்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்களினால் முகத்தில் கரும்புள்ளி ஏற்படுகிறது. இதனால் முகம் பொலிவிழந்து கருமையாக இருக்கும். எனவே இதனை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று நாமும் சில முறைகளை பின்பற்றி வருகிறோம். அதேபோல் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை இயற்கையான பொருட்களை வைத்து எப்படி போக்குவது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
How To Remove Spots From Face in 2 Days Naturally at Home in Tamil:
கற்றாழை பயன்படுத்தவும்:
தேவையான பொருட்கள்:
- கற்றாழை – 1
- வெள்ளரிக்காய் – 1 (சிறியது)
- எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
- சந்தன தூள் – 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
முதலில் கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு உட்புறத்தில் உள்ள ஜெல்லினை மட்டும் 3 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து, ஒரு பாதியளவு வெள்ளரிக்காயை எடுத்து துருவி வைத்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல், துருவிய வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு மற்றும் சந்தன தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை உங்கள் முகத்தில் கரும்புள்ளி உள்ள இடங்களில் அப்ளை செய்து நன்கு காய விடுங்கள். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து 2 நாட்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி எளிதில் நீங்கி விடும்.
உங்க முகம் எப்படிங்க இவ்வளவு வெள்ளையாச்சு கேட்பாங்க.. பாசிப்பயிரை இப்படி பயன்படுத்தினால்..!
மஞ்சள் பயன்படுத்தவும்:
தேவையான பொருட்கள்:
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- பால் – 1/2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில், மஞ்சள் தூள், பால் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் முகத்தில் கரும்புள்ளி உள்ள இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை காய விடுங்கள். அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து 2 நாட்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி எளிதில் நீங்கி விடும்.
போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |