How to Remove Spots From Face in 2 Days Naturally at Home
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகத்தில் பருக்கள், தேமல், கரும்புள்ளி போன்றவை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி மேலும் பிரச்சனையை ஏற்படுத்தி கொள்கின்றனர். அதனால் முகத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கரும்புள்ளிகளை இரண்டு நாட்களில் சரி செய்யலாம். என்னென்ன பொருட்களை பயன்படுத்தி கரும்புள்ளிகளை சரி செய்யலாம் இன்று தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
கரும்புள்ளிகள் மறைய:
கற்றாழை ஜெல்:

கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது.
பயன்படுத்துவது எப்படி.?
கற்றாழையில் உள்பகுதியில் உள்ள ஜெல்லை மட்டும் பிரித்தெடுத்து கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு, 1 தேக்கரண்டி சந்தன தூள், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இதை வாரத்தில் 3 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி விடும்.
கன்னம் கொழுகொழுன்னு இருக்கிறதுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா.?
பால்:

பாலில் உள்ள வைட்டமின் பி, கால்சியம், அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் முகத்தில் உள்ள சுருக்கம், பருக்கள், கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.
பயன்படுத்துவது எப்படி.?
ஒரு பவுலில் 2 தேக்கரண்டி பச்சை பாலுடன், முல்தானி மெட்டி சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதன் உங்கள் முகத்தில் தடவி 2 நிமிடத்திற்க்கு மசாஜ் செய்யவும். பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி கழுவி கொள்ளவும்.
தக்காளி:

தக்காளியில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள பள்ளங்களை குறைத்து பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
பயன்படுத்துவது எப்படி.?
தக்காளியை சிறியதாக நறுக்கி மிக்சியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














