Black Spots on Face Home Remedy
தன்னை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர், இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துகின்றனர், இல்லையென்றால் பார்லருக்கு சென்று தன்னை அழகுப்படுத்தி கொள்கிறார்கள். என்ன தான் காசு கொடுத்து செலவு செய்தாலும் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நம் முகத்தை அசிங்கப்படுத்துகின்றன. அதனால் இந்த பதிவில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக மறைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
கரும்புள்ளிகளை நீக்குவதற்கு வீட்டு குறிப்புகள்:
எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் கேடகோலேஸ் என்ற நொதி உள்ளது, இது ஹைப்பர் பிக்மென்டேஷன் திட்டுகளை நீக்கி ,முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
1/2 உருளைக்கிழங்கை எடுத்து சிறிதாக கட் செய்து கொள்ளவும். இதனை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்டுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை தொடர்ந்து அப்பளை செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும்.
இவ்ளோ முடி எப்ப வளர்ந்ததுனு எனக்கே தெரியாது.. அப்படினு சொல்ற அளவுக்கு முடி வளர இதை தடவுங்க |
தக்காளி சாறு:
ஒரு பவுலில் வெண்ணெய் பால், கோதுமை மாவு சிறிதளவு, தக்காளி சாறு சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவி கொள்ளவும். அதன் பிறகு செய்து வைத்துள்ள பேக்கை கண் மற்றும் உதடு பகுதிகளை தவிர்த்து விட்டு முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். பிறகு 30 நிமிடம் இந்த பேக்கை முகத்தில் வைத்திருந்து தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த பேக்கை தினமும் பயன்படுத்த வேண்டும்.
சந்தன தூள் பேக்:
ஒரு பவுலில் சந்தன தூள் பேக் 1/2 தேக்கரண்டி, கிளிசரின் சிறிதளவு, ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதை தினமும் அப்ளை செய்து வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதவாது ஒன்றை தினமும் பயன்படுத்தி வந்தாலே கரும்புள்ளிகள் மறைய தொடங்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |