Home Remedies For Stretch Marks in Tamil
பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஸ்ட்ரெச் மார்க் எனப்படும் பிரசவ தழும்பு ஏற்படுகிறது. ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது, உடல் எடை அதிகரிப்பதிலிருந்து ஹார்மோன் அதிகரிகப்பு மற்றும் அரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் அடிவயிற்றில் இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகிறது. இந்த தழும்பு மறையாமல் பிரசவத்திற்கு பிறகும் இருக்கும். இதனால் பெரும்பாலான பெண்கள் பல்வேறு விதமான சிகிச்சைகளை பெற்று வருகிறார்கள். எனவே, இயற்கையான பொருட்களை வைத்து இந்த ஸ்ட்ரெச் மார்க்கை மறைய வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Remove Stretch Marks Permanently in Tamil:
உருளை கிழங்கு சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு:
முதலில் உருளை கிழங்கு சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு இரண்டையும் எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை உடலில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடத்தில் அப்ளை செய்து 1 மணிநேரம் அல்லது 1/2 மணிநேரம் வரை அப்படியே வைத்து அதன் பிறகு குளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வருவதன் மூலம் ஸ்ட்ரெச் மார்க்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும்.
ஆயில் மசாஜ்:
உடம்பில் உள்ள ஸ்ட்ரெச் மார்க்ஸ் மறைய ஆயில் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்.
அதாவது பாதாம் எண்ணெய் ,தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதனை உடம்பில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடத்தில் அப்ளை செய்து கிட்டத்தட்ட 1 மணிநேரம் வரை நன்கு மசாஜ் செய்யுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஸ்ட்ரெச் மார்க்ஸ் மறைய தொடங்கும்.
கற்றாழை:
கற்றாழையின் வெளிப்புற தோலை நீக்கிவிட்டு உட்புறத்தில் உள்ள ஜெல்லினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இதனை நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை உடம்பில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடங்களில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் வரை உலரவிட்டு அதன் பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவி விடுங்கள்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |