இந்த 3 பொருட்கள் போதும்..! முகம் நிலவு போல் ஜொலிக்க..!

Advertisement

5 நிமிடத்தில் முக கருமை நீங்க டிப்ஸ் 

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவா ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். அழகுக்கென்றே அதிக நேரத்தை செலவிடுவார்கள். ஆனாலும் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் என்று வந்து விடுகிறது. இப்படி இருக்கையில் இதை சரி செய்வதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் மேலும் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது. முகத்தில் பருக்கள் கரும்புள்ளிகள் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் இந்த பிரச்சனையை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அதனால் இந்த பதிவில் 5 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் பளபளப்பாக மாற டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Remove Sun Tan From Face Naturally in Tamil:

முக கருமை நீங்க

  1. உருளைக்கிழங்கு –
  2. காய்ச்சிய பால் – 1 டேபிள் ஸ்பூன்
  3. கோதுமை மாவு – 1 ஸ்பூன்

முதலில் உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி, தோல் நீக்கி எடுத்து கொள்ளுங்கள். பின் அதை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

அடர்த்தியான மற்றும் கருமையான முடிக்கு இந்த எண்ணெய் போதுங்க…

பின் அதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன், 1 ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் காய்ச்சிய பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

அவ்வளவு தான் பேஸ் பேக் ரெடி. இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். பின் இந்த பேக்கை உங்கள் முகத்தில் அப்ளை நன்றாக மசாஜ் செய்யவும். இந்த பேக் உங்கள் முகத்தில் 15 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும்.

15 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை கழுவி கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமை மறைந்து முகம் பளபளப்பாக மாறும். மேலும் முகத்தில் பருக்கள் வருவதை தடுத்து, கரும்புள்ளிகள் தழும்புகளை மறைய செய்கிறது. 

இயற்கையான சரும பொலிவுக்கு 5 வழிகள்…

How To Remove Sun Tan Naturally in Tamil:

முக கருமை நீங்க

அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 2 ஸ்பூன் காபி பவுடர், 3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும்.

இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகம் பொலிவாக மாறும். மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் தழும்புகள் மறையும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement