வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Advertisement

முக கருமை நீங்க | How To Remove Tan in Tamil 

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்கள் ஊர்ல வெயில் எப்படி இருக்கு. இங்க வெயில் கொளுத்து கொளுத்துனு கொளுத்திகிட்டு இருக்கு. நம் அனைவருக்குமே இந்த நேரத்தில் வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது அல்லவா..! பொதுவாக நம் அனைவருக்குமே வெயிலில் அதிகமாக சென்றால் உடலில் ஏதாவது பாதிப்பு வருமோ என்று பயம் கொள்வோம். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. வெயிலில் சென்றால் முகம் கருத்துப் போய்விடுமோ என்று பயப்படுகிறார்கள். முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கக்கூடிய கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம் முகத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கலராக மாற்றலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முகம் பொலிவு பெற இயற்கை டிப்ஸ்: 

முகம் பொலிவு பெற இயற்கை டிப்ஸ்

  1. பால் – 1/2 கப்
  2. உருளைக்கிழங்கு – 1 

முதலில் 1 உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளுங்கள். அதன் தோலை நீக்கிவிட்டு அதை சீவி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கு முக கருமையை போக்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் தழும்புகள் போன்றவற்றை மறைய செய்கிறது. எனவே உருளைக்கிழங்கை 1 அல்லது உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள்.

மத்தவங்க முடிக்கு என்னங்க தடவுறீங்கன்னு கேப்பாங்க.. அந்தளவுக்கு முடி வளரும்.. 

கடாயை அடுப்பில் வைக்கவும்: 

முகம் பொலிவு பெற இயற்கை டிப்ஸ்

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைக்கவும். பின் அதில் நாம் எடுத்து வைத்துள்ள பாலை ஊற்றி கொள்ள வேண்டும். பால் சூடானதும் அதில் நாம் சீவி எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு கொதிக்கவிட வேண்டும்.

இரண்டும் சேர்ந்து நன்றாக கொதித்து மாவு போல வந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பின் இது ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்து கொள்ளவும்.

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா.. ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க

பயன்படுத்தும் முறை: 

அவ்வளவு தான் இப்போது இந்த பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை கழுவி ஈரப்பதம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். பின் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து வேண்டும்.

இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் குறைந்தது 20 நிமிடம் வரை அப்படியே வைத்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். அவ்வளவு தான் இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.

செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement