How to Remove Tan Trom Face Immediately in Tamil
சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக வெப்பம் காரணமாக நம்முடைய தோல் மற்றும் முடி விரைவாக சேதம் அடைய ஆரம்பிக்கும். தோல்களில் தான் சூரிய கதிர்களின் தாக்கம் அதிகமாக காணப்படும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரே இரவில் சன் டானை சரி செய்யலாம்.
சரி வாங்க அது என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அந்த பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
சன் டான் நீக்க எலுமிச்சை சாறு மற்றும் தேன்:
எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் விளைவைக் கொண்டிருக்கிறது, இது விரைவில் டானை நீக்க உதவுகிறது.
- எலுமிச்சை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து, உங்கள் தோலில் தடவவும். 30 நிமிடங்கள் அப்படியே வைத்து கழுவவும்.
- நீங்கள் எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரை சேர்த்து உங்கள் சருமத்தை மெதுவாகமசாஜ் செய்யவும், இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள இறந்த செல்களை மேற்பரப்பில் இருந்து வெளியேற்றலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நாள் முழுக்க முகம் பளபளப்பாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா.?
வெள்ளரி சாறு:
பொதுவாக வெள்ளரிக்காய் குளிச்சிவாய்ந்த ஒரு பொருள். இதனை நம் சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களை தரும். சரி வாங்க இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
- ஒரு வெள்ளரிக்காயை துண்டாக்கி, சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு பருத்தி பந்தைப் பயன்படுத்தி,வெள்ளரி சாறை நனைத்து உங்கள் தோல் முழுவதும் தடவவும்.
- பிறகு 10 நிமிடம் வரை உலர்த்தி கழுவவும். கூடுதல் நன்மைகளுக்காக நீங்கள் சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்க்கலாம். இதன் மூலம் சருமம் போலுவுடன் இருக்கும்.
தயிர் மற்றும் தக்காளி டான் குறைக்க:
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சருமத்தை பொலிவாக்க உதவுகிறது . தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது சருமத்தை மென்மையாக்குகிறது.
- தக்காளியை பச்சையாக எடுத்து தோலை நீக்கவும்.
- அதை 1-2 டீஸ்பூன் புதிய தயிருடன் கலக்கவும்.
- இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் பயன்படுத்தவும், 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதன் மூலம் சன் டான் குறைய ஆரம்பிக்கும்.
உருளைக்கிழங்கு சாறு டான் போக்க:
உருளைக்கிழங்கு சாறு பெரும்பாலும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கப் பயன்படுகிறது. உருளைக்கிழங்கின் சாறு இயற்கையாகவே ஒரு சக்திவாய்ந்த ப்ளீச்சிங் தன்மையை கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி சான் டானை எப்படி அகற்றலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
- உருளைக்கிழங்கில் சாறு பிழிந்து, அதை நேரடியாக உங்கள் தோலில் தடவினால், வெயிலினால் சருமம் கருமையடைந்த நிறம் மறைந்துவிடும்.
- மாற்றாக, உங்கள் கண்கள் மற்றும் முகத்தில் மெல்லிய உருளைக்கிழங்கு துண்டுகளையும் பயன்படுத்தலாம்.
- அவற்றை 10-12 நிமிடங்கள் வைத்திருங்கள், அது காய்ந்தவுடன் கழுவவும். இதன் மூலம் முகத்தில் உள்ள கருமை மற்றும் கருவளையம் நீங்கும்.
கருமையை நீக்கும் தேன் மற்றும் பப்பாளி:
பப்பாளியில் இயற்கையான என்சைம்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தை வெண்மையாக்கும் மற்றும் எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகளைக் கொண்டுள்ளன. மறுபுறம், தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தை மென்மையாக்கும்தன்மை கொண்டது. மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது சருமத்தில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது, இது வயதான தோற்றத்தை மறைகிறது. இதனால் நீங்கள் இளமையுடன் இருக்கலாம்.
- பழுத்த பப்பாளி 4-5 துண்டுகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
- ஒரு மென்மையான பேஸ்ட் உருவாகும் வரை நன்கு கலக்கவும்.
- இந்த பேஸ்ட்டை தோல் முழுவதும் தடவி உலர விடவும்.
- 20-30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும். இதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |