How to Remove Teeth Stains at Home in Tamil
பொதுவாக நமது முகத்திற்கு மிகவும் அழகினை சேர்ப்பது எதுவென்றால் அது நமது பற்கள் தான். அப்படி நமது முகத்திற்கு அழகு சேர்க்கும் பற்களை நாம் எப்போதும் தூய்மையாக பராமரித்து கொள்ள வேண்டும். நாம் நமது பற்களை எவ்வளவு தான் தூய்மையாக பராமரித்தாலும் அதில் உள்ள ஒரு சில கறைகளை நம்மால் போக்கவே முடியாது. அதனை போக்குவதற்காக நாமும் பல வகையான வேதிப்பொருட்கள் கலந்த பேஸ்ட் மற்றும் மவுத் கிளீனர் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவோம்.
ஆனால் அவையாவும் நீண்ட நாட்களுக்கான பலன்களை அளித்திற்காது. அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் பற்களில் உள்ள கறைகளை 10 நிமிடத்தில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Remove Deep Stains from Teeth in Tamil:
இயற்கையான முறையில் உங்களின் பற்களில் உள்ள கறைகளை 10 நிமிடத்தில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க. அதற்கு முன்பு இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு – 1/2 டேபிள் ஸ்பூன்
- அதிமதுரப்பொடி – 1 டேபிள் ஸ்பூன்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ பற்களில் உள்ள சொத்தையினை போக்க சீதாப்பழ இலையை கூட பயன்படுத்தலாமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
எலுமிச்சை பழச்சாற்றினை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அதிமதுரப்பொடியை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் அதிமதுரப்பொடியை கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்களின் பேஸ்ட்டுக்கு பதிலாக தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள்.
உங்களின் பற்களில் நீண்ட நாட்களாக இருந்த கறைகள் கூட இருந்த இடம் தெரியாமல் நீங்கி விடும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ உங்களின் பற்களில் உள்ள சொத்தை நீங்க இதை மட்டும் செய்து பாருங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |