முகப்பரு கரும்புள்ளிகள்
முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகத்தில் பருக்கள் வந்து விடுகிறது. இந்த பருக்களை அப்படியே விட்டு விட்டால் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடும். நீங்கள் பருக்களை மறைப்பதற்கு கிரீம்களை வாங்கி அப்ளை செய்தாலும் அவை நாளடைவில் தழும்புகளாக மாறிவிடும். அதனால் இந்த பதிவில் கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேனை பயன்படுத்தி கரும்புள்ளியை மறைப்பது எப்படி.?
முதலில் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், சர்க்கரை 1/2 டீஸ்பூன், தேன் 1/2 டீஸ்பூன் மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து வெந்நீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளவும். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைவதை நீங்களே காணலாம்.
தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை கலந்து தலையில் தடவி பாருங்க..
கரும்புள்ளி மறைய தக்காளி:
தக்காளி 1, தயிர் 3 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், பப்பாளி – சிறிய துண்டு மூன்று பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து வெந்நீரை பயன்படுத்தி முகத்தை நன்கு கழுவி கொள்ளவும். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைவதை நீங்களே காணலாம்.
உங்களின் முகம் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அழகாக இளமையா இருக்கனுமா..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |