அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Advertisement

வியர்வை நாற்றம் நீங்க

மனிதர்களுக்கு வியர்ப்பது இயல்பான விஷயம். நம் உடலில் ஒரு விதமான சுரப்பி தான் வியர்ப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்த சுரப்பிகள் சுரக்கும் விதத்தை வைத்து தான் வியர்வை அதிகமாக சுரப்பதும், குறைவாக சுரப்பதும் காரணமாகின்றன. வியர்வை சுரக்காமலும், அதிகமாக சுரந்தால் தான் பிரச்சனை. அதற்காக நம் உடலில் இருந்து வரும் வியர்வை நாற்றம் மற்றவர்களை தொந்தரவு செய்தால் நமக்கே ஒரு மாதிரியாக தான் இருக்கும். அதனால் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி வியர்வை நாற்றத்தை எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

வியர்வை நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும்:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

எலுமிச்சை சாறு:

 அக்குள் துர்நாற்றம் நீங்க

எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை பாக்ட்ரியாவை அழிக்கும் தன்மையை கொண்டது. இதற்கு நீங்கள் குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாற்றை மிக்ஸ் செய்து குளிக்க வேண்டும். இல்லையென்றால் எலுமிச்சை சாற்றை அக்குள் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து விடவும்., இப்படி தொடர்ந்து செய்து வந்தால் அக்குள் வியர்வை நாற்றம் நீங்கி விடும்.

மஞ்சள்:

 அக்குள் துர்நாற்றம் நீங்க

மஞ்சள் பாக்ட்ரியாக்களை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது. அதனால் மஞ்சளை அரைத்து பேஸ்ட்டாக வைத்து கொள்ளவும். இதனை அக்குள் பகுதியில் தடவி 10 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிக்க வேண்டும்.

ஆப்பிள் சைடர் வினிகர்:

 அக்குள் துர்நாற்றம் நீங்க

1/2 கப் தண்ணீரை எடுத்து, அதில் ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு கப் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதனை இரவு தூங்குவதற்கு முன்பு அக்குள் பகுதியில் ஸ்ப்ரே செய்து காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளவும்.

2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க 

தக்காளி சாறு:

 அக்குள் துர்நாற்றம் நீங்க

ஒரு பவுலில் எலுமிச்சை சாறு, தக்காளி சாறு கலந்து கொள்ளவும். இந்த பேக்கை அக்குள் பகுதியில் தடவி 10 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிக்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் ஏதவாது ஒன்றை தினமும் செய்து வர வேண்டும். அதோடு நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை கீழே பதிவிட்டுள்ளோம். அதையும் பின்பற்றுங்கள் வியர்வை நாற்றம் இல்லாமல் நாள் முழுவதும் பிரஷாக இருக்கலாம்.

ஆடைகளை இறுக்கமாக அணியாமல் தளர்வான ஆடைகளாக அணிய வேண்டும். மேலும் காட்டன் துணியை அணிவது உடலில் ஏற்படும் வியர்வையை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கும்.

உணவுகளில் காபி, பூண்டு, வெங்காயம் போன்ற துர்நாற்றம் ஏற்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அக்குள் பகுதியில் முடி இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். அதனால் அதனையும் அடிக்கடி நீக்கி விடவும்.

Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement