உங்கள் பற்கள் மஞ்சள் கறையாக உள்ளதா 5 நிமிடத்தில் சரிசெய்ய எளிய வழிமுறைகள்

Advertisement

How to Remove Yellow Stains in Your Teeth in Tamil

பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி அருந்துவது, புகை பிடிப்பது போன்றவைகளே மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. பற்களை வெள்ளையாக்குவதற்கு எண்ணற்ற தயாரிப்புகள் தற்பொழுது கிடைக்கின்றன. இருப்பினும் அந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை பிளீச் வகையை சேர்ந்தவை, அவை வெண்மையாக்கும் முகவராக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பற்களின் நிறம் மாற்றத்திற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

சில உணவுகள் உங்கள் பற்களின் வெளிப்புற அடுக்காக இருக்கும் எனாமலை கறைபடுத்தும். ஆனால் சில நேரங்களில் பற்கள் முழுவது மஞ்சள் நிறமாக தெரியும். ஏன் என்றால் அவை கடினமான எனாமலை அரித்து அடியில் உள்ள Dentin-ஐ வெளிப்படுத்துகிறது. Dentin என்பது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது எனாமலுக்கு அடியில் இருக்கும். இருப்பினும் உங்கள் பற்களை வெண்மையாக சில எளிய இயற்கையான வழிகள் உள்ளன அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பற்கள் மஞ்சள் கறை போவது எப்படி? – How to Remove Yellow Stains in Your Teeth in Tamil

ஆயில் புல்லிங்:

ஆயில் புல்லிங் என்பது ஒரு பாரம்பரிய முறையாகும், இந்த ஆயில் புல்லிங் செய்ய பொதுவாக பயன்படுத்தப்படும் எண்ணெய் எதுவென்றால் சூரியகாந்தி எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவை இரண்டும் பயன்படுத்தப்படுகிறது.

இவை வாய்வழி சக்கரத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதுடன், பாக்டீரியாக்களை அகற்றி பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்க உதவுகிறது.

இது ஒரு பாதுகாப்பான நடைமுறை என்பதை இதனை யாரு வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகம் வெள்ளி போல் மின்ன அரிசி மாவுடன் இதை மட்டும் கலந்து தடவி பாருங்க..!

உப்பு:salt with lemon

பல் துலக்கும் போது பிரஷால் உப்பு தொட்டு அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை இட்டு பல் துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.

கடுகு எண்ணெய்:

அரை டீஸ்பூன் கடுகு எண்ணெயில் சிறிதளவு உப்பு கலந்து அதனை விரலால் தொட்டு பற்கள் மற்றும் ஈறுகளில் சிறிது  நேரம் மசாஜ் செய்து வாய் கொப்பளிக்கவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் பற்களின் மஞ்சள் கறை மறையும் என்று சொல்லப்படுகிறது. மேலும் பயோரியா என்று சொல்லப்படும் பிரச்சனையும் நீங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதினா:

புதினா இலையை வெயிலில் காயவைத்து பொடி செய்து அதனை பயன்படுத்தி பல் துலக்கினாலும் பற்களின் மஞ்சள் கறை நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகம் தங்கம் போல் ஜொலிக்க கல்ல மாவுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement