எவ்வளவு முடி கொட்டினாலும் இந்த ஒன்று போதும் அதை சரி செய்ய..!

Advertisement

How to Stop Hair Fall Immediately At Home For Female in Tamil

பொதுவாக தலை முடி கொட்டுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் என்றால் உடலில் சத்துக்கள் குறைவாக இருப்பது தான். ஆகவே சரியாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மட்டுமில்லாமல் தலை முடிக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும். சரி தலை முடி கொட்டினால் எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய் அதேபோல் ஷாம்பு சீயக்காய் என எந்த பொருட்களையும் மாற்றாதீர்கள். அதற்கு பதிலாக முடிக்கு பதிவில் சொல்லும் ஹேர் பேக் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் தலை முடி வளர்வதை அதிகப்படுத்தும். சரி வாங்க அந்த ஹேர் பேக் பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Stop Hair Fall Immediately At Home For Female in Tamil:

 hair fall solution at home in tamil

இந்த ஹேர் பேக் போடுவதற்கு முதல் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் காய்ந்த நெல்லிக்காய். காய்ந்த நெல்லிக்காய் என்பதால் 4 முதல் 5 ஸ்பூன் அளவு முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

அதேபோல் முதல் நாள் இரவே வெந்தயம் 5 ஸ்பூன் அளவு ஊறவைக்கவும்.

அடுத்து மிக்சி ஜார் எடுத்துக் கொள்ளவும். அதில் நாம் ஊறவைத்த வெந்தயத்தை எடுத்துக் கொள்ளவும். அதன் கூடவே நாம் ஊறவைத்த நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ளவும்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. 

இது அரைக்கும் போது நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கூட சேர்த்து கொள்ளவும். அதனை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனை அப்படியே ஒரு வடிகட்டி அல்லது ஒரு துணியை வைத்து அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

 hair fall solution at home in tamil

அடுத்து வடிகட்டி வைத்துள்ள சாறில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்துக் கொள்ளவும். இதனை அப்படியே நன்கு கலந்து கொள்ளவும். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி.

பயன்படுத்தும் முறை:

முதலில் தலையில் எண்ணெய் வைத்து சிக்கு இல்லாமல் எடுத்துக்கொண்டு அடுத்து தலையை முடியை இரண்டாக பிரித்துக் கொள்ளவும். அடுத்து ஹேர் பேக் வேர் முதல் நுனி வரை அப்ளை செய்து அதன் பின்பு 20 நிமிடம் ஊறவிட்டு எப்போதும் போல் குளிக்கலாம். அவ்வளவு தான். இதனை வாரத்தில் ஒரு முறை செய்தால் போதுமானது ஆகும்.

வெயிலால் முகம் கருத்து விட்டதா  அப்போ இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement