வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கொத்து கொத்தாக தலைமுடி உதிர்கிறதா..? அப்போ இந்த 5 வழிமுறைகளை மட்டும் பயன்படுத்துங்க போதும்..!

Updated On: June 7, 2023 7:21 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

How to Stop Hair Fall in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் அழகினை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியபட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் அனைவருமே தங்களின் அழகினை பராமரித்து கொள்வதில் மிக மிக கவனம் செலுத்துவார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களின் முகத்தில் சிறியதாக ஒரு பரு வந்து விட்டாலும் அதனை சரி செய்வதற்கு மிகவும் முயற்சிப்பார்கள். அப்படிப்பட்ட பெண்கள் தங்களின் அழகினை தூக்கி காட்டும் தலை முடி உதிர்ந்தால் எவ்வாறு தாங்கி கொள்வார்கள். அதனால் அதனை சரி செய்வதற்காக பல வகையான ஷாம்பு, ஹேர் பேக் ஆகியவற்றை பயன்படுத்துவோம். ஆனால் அவையாவும் நிரந்தர தீர்வாக அமையாது. அதனால் இன்றைய பதிவில் முடி உதிர்வை நிறுத்தி மீண்டும் முடி உதிர்வு வராமல் இருப்பதற்கான 5 வழிகளை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்னென்ன வழிகள் என்பதை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Stop Hair Fall Naturally in Tamil:

மன அழுத்தம், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை, மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பம் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகளின் பயன்பாடு மற்றும் தைராய்டு பிரச்சினைகள் ஆகியவை தலைமுடி உதிர்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

ஆனால் இயற்கையான சில வழிமுறைகளை பின்பற்றி உங்களின் தலைமுடி உதிர்வை நிரந்தரமாக போக்கி கொள்ளலாம்.

தினமும் மசாஜ் செய்தல்:

How to Stop Hair Fall Naturally in Tamil

முடியின் வளர்ச்சியை தூண்டினாலே முடி உதிர்வை போக்கி விடலாம். முடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கு மசாஜ் உதவும். தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இல்லையெனில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஏதாவது ஒன்றை எடுத்து விரல்களால் தடவி தலை முடியின் வேர்க்கால்களில் லேசாக மசாஜ் செய்து அழுத்தமும் கொடுக்கவும்.

இதனால் தலையில் இரத்த ஓட்டம் சீராகும். தலை முடியின் வேர்க்கால்களில் தொற்றுகள் ஏற்படாது. மேலும் தலைமுடி பலமாகும் இதனால் முடி உதிர்வை போக்கி விடலாம்.

கொட்டிய இடத்தில் எல்லாம் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரவைக்க இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்

வெந்தயம்:

Hair fall control tips in tamil

வெந்தயம் தலை முடிக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கின்றது. அதாவது வெந்தயம் முடி உதிர்வை கட்டுப்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் நன்கு பசை போல் அரைத்து உங்களின் தலையில் தடவி சில நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்தாலே உங்களின் தலை முடி உதிர்வது குறையும்.

நெல்லிக்காய்:

Mudi uthirvai kuraikka tips in tamil

முடி உதிர்தல் பிரச்சனையை போக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமின்றி தலை முடியை நன்கு பலப்படுத்துகிறது.

அதாவது நெல்லிக்காய் பொடியுடன் சீயக்காய் சேர்த்து நன்கு கலந்து உங்களின் தலையில் தடவி சில நிமிடங்கள் அப்படியே விடுங்கள். அதன் பிறகு தலைக்கு குளியுங்கள். இதனை செய்வதாலும் உங்களின் தலை முடி உதிர்வு குறையும்.

முகத்துல வயசு தெரியாம இருக்கணும்னா இதை மட்டும் செய்யுங்க என்றும் இளமையாவே இருப்பீங்க

கற்றாழை:

How to control hair fall in tamil

கற்றாழை நமது உடலுக்கு பல வகையான ஆரோக்கிய பலன்களை அளிக்கின்றது. அதே போல தான் முடி உதிர்வை போக்குவதற்கும் கற்றாழை மிகவும் உதவுகின்றது. அதாவது கற்றாழையை எடுத்து அதனின் நடுவில் உள்ள சதைப்பகுதியினை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசை போல் அரைத்து உங்களின் தலை முடியின் வேர்களில் படுமாறு நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு சில நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதால் சில நாட்களில் முடி உதிர்வு நீங்கும்.

சின்ன வெங்காய சாறு:

Mudi uthirvai kuraikka tips at home in tamil

சின்ன வெங்காயமும் நமது உடலுக்கு பல வகையான ஆரோக்கிய பலன்களை அளிக்கின்றது. அதே போல தான் முடி உதிர்வை போக்குவதற்கும் மிகவும் உதவுகின்றது.

இதனை அரைத்து அதில் உள்ள சாற்றினை மட்டும் பிரித்து எடுத்து அதனை உங்களின் தலை முடியின் வேர்களில் படுமாறு நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு சில நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இவ்வாறு செய்வதாலும் உங்களின் தலை முடி உதிர்வதை போக்கி கொள்ளலாம்.

உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க உதவும் 5 எளிமையான வழிகள்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!