How to Stop Summer Hair Fall
வெயில் காலம் வந்தாலே நம்மை பின் தொடர்ந்து மற்ற பிரச்சனைகளும் வந்து விடும். அதுவும் குறிப்பாக உடல் சூடு, முடி உதிர்வு, மமுகத்தில் பருக்கள் என இதுபோன்ற பிரச்சனைகள் காணப்படும். இவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் நாம் சரி செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற செயல். சரி ஒன்று ஒன்றாக சரி செய்யலாம் என்றாலும் கூட இதற்கு என்ன முகம் மற்றும் முடிக்கு அப்ளை செய்வது என்று நமக்கு தோன்றும். அதனால் இன்று முதலில் கோடை காலத்தில் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனையினை போக்குவதற்கான ஹேர் பேக் எப்படி தயார் செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முடி உதிர்வு நீங்க:
- வெந்தயம்- 3 ஸ்பூன்
- சாதம் வடித்த தண்ணீர்- 1 கப் அளவிற்கு
- பாசிப்பயிறு- 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
கோடை காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை நிறுத்தி முடி 1 அடி வரை நீளமாக வளர மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும்.
முடி உதிர்வதை தடுக்க வெங்காயம்:
வெந்தயம் மற்றும் சாதம் வடித்த தண்ணீரில் உள்ள சத்துக்கள் ஆனது இயற்கையாகவே நம்முடைய உடல் சூடு மற்றும் முடி உதிர்வு பிரச்சனையினை சரி செய்து இழந்த முடியினை மீண்டும் திரும்ப பெற செய்கிறது.
அதனால் ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் 3 ஸ்பூன் வெந்தயம் மற்றும் பாசிபயிரினை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள்.
மறுநாள் காலையில் எழுந்து ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள பொருட்கள் மற்றும் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.
இப்போது அரைத்து வைத்துள்ள வெந்தயம் பேஸ்ட்டினை ஒரு காட்டன் துணியில் சேர்த்து வடிகட்டி கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க முடி உதிர்வை நிறுத்து முடி அடர்த்தியாக வளரக்கூடிய ஹேர் பேக் தயார்.
How to Use Hair Pack:
தயார் செய்து வைத்துள்லா ஹேர் பேக்கினை அப்ளை செய்வதற்கு முன்பாக வழக்கம் போல் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு வெந்தயம் ஹேர் பேக்கினை முடியின் அனைத்து பகுதியிலும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து ஷாம்பு பயன்படுத்தி தலை குளித்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் செய்தால் போதும் முடி உதிர்வு நீங்குவதோடு மட்டும் இல்லாமல் முடி நீளமாகவ வளரும் மற்றும் நரை முடியும் வராது.
காலில் உள்ள கருமை நிறம் நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து போடுங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |