Hair Care in Rainy Season in Tamil
மற்ற காலங்களை விட மழைக்காலத்தில் தலைமுடியை நாம் முறையாக பராமரிக்க வேண்டும். ஏனென்றால், மழைக்காலத்தில் தலையில் அதிக பொடுகுகள், அதிக அளவு ஈரப்பதம் மற்றும் பிசுபிசுப்பு போன்றவை சேர்ந்து விடுகிறது. இதனால் வழக்கமாக இருப்பதை விட மழைக்காலத்தில் அதிக அளவில்முடி உதிர்கிறது. எனவே இந்த பிரச்சனையை எப்படி போக்குவது என்பதை பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Take Care of Hair in Rainy Season in Tamil:
எண்ணெய் குறைவாக தேய்க்கவும்:
மழைக்காலத்தில் நாம் தேய்க்கும் எண்ணெய் ஆனது, உலராமல் அப்படியே இருக்கும். இதனால் தலையில் பிசுபிசுப்பு உண்டாகும். எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் பொடுகு உண்டாகக்கூடும். எனவே, வாரத்திக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே எண்ணெய் தேய்க்க வேண்டும்.
நன்கு உலர்த்த வேண்டும்:
மழைநீர் தலையில் பட்டால் ஒருவிதமான பிசுபிசுப்பு உருவகும். இதனால் தலையில் அதிகப்படியான அழுக்கு சேரும். எனவே, மழையில் நனைந்தால் உடனே முடியை நல்ல தண்ணீர் வைத்து தலையை அலசி நன்கு காயவைக்க வேண்டும்.
தலையில் துண்டு கட்டுவதை தவிர்க்க வேண்டும்:
பெரும்பாலான பெண்கள் மழையில் நனைந்ததும் தலையை காயவைக்காமல் ஒரு துண்டு கொண்டு முடியை இறுக்கமாக கட்டி வைத்து விடுவார்கள். இது மிகவும் தவறான செயல். ஏனென்றால், தலையில் துண்டு கட்டும்போது, தலையில் காற்றோட்டம் இல்லாமல் முடி உதிர தொடங்கும். எனவே, தலையில் துண்டு கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இந்த ஒரு ஸ்ப்ரே போதும்
ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்:
மழைக்காலத்தில் தலைமுடியில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கவும், முடி மென்மையாக இருக்கவும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |