வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை ட்ரை பண்ணி பாருங்க…!

Advertisement

How to Treat dry Skin on Face in Tamil

இன்றைய கால பெண்கள் பெரும்பாலும் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் ஒரு சில பெண்கள் தம் முகத்தை அழகுபடுத்தி கொள்ள கடைகளில் விற்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஒரு பயனும் இல்லை, அதற்கு இயற்கையான பொருட்களை வைத்து வறண்ட முகத்தை சரி செய்வதை  பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சாதம் கஞ்சி:

 வறண்ட சருமம் உள்ளவர்கள்

முதலில் சாதம் வடித்த கெட்டியான கஞ்சியை எடுத்து கொண்டு, மிதமான சூட்டில் இருக்கும்போதே அதனுடன் 1 டேபுள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். நமது உடம்பில் எந்த இடத்தில் வறண்டு இருக்கின்றதோ அந்த இடத்தில் எடுத்து வைத்த கஞ்சியை அப்ளை செய்து கொள்ள வேண்டும். பிறகு உடலில் தேய்த்து ஊறியதும் மிதமான தண்ணீரில் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால் 5 அல்லது 6 நாட்கள் செய்து வரும் போது வறண்ட சருமம் நீங்கி விடும்.

கற்றாழை ஜெல்:

 varanda sarumam tips in tamil

முதலில் கற்றாழை இலையை எடுத்து கொள்ளவும். பிறகு கற்றாழையின் மேல் இருக்கும் முற்களை நீக்கி விட்டு,  கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை வறண்ட சருமத்தில் மசாஜ் செய்து வர வேண்டும். இதனை இரவில் தூங்குவதற்கு முன்பு செய்ய வேண்டும். இதை ஒரு வாரத்தில் 2 முறை செய்வதன் மூலம் வறண்ட சருமம் மாறி பளபளப்பாக இருக்கும்.

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..  முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம். 

தேங்காய் எண்ணெய்: 

 வறண்ட சருமம் நீங்க

முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளவும். வறண்ட சருமத்தில் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து விட்டு, நல்ல சுத்தமான தண்ணீரில் குளிக்க வேண்டும். இதனை ஒரு வாரத்திற்கு  1 அல்லது 2 முறை செய்வதனால் வறண்ட சருமம் மாறி விடும்.

ஜோஜோபா எண்ணெய்:  

 dry skin tips in tamilமுதலில் 1/2 டேபுள் ஸ்பூன் ஜோஜோபா எண்ணெய்யை எடுத்து கொள்ளவும். அதன் பிறகு 2 கப் மிதமான சூடு தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து, 5 அல்லது நிமிடம் வறண்ட சருமத்தில் அப்படியே வைக்க வேண்டும். பிறகு ஜோஜோபா எண்ணெய் வைத்து மசாஜ் செய்து விட்டு, நல்ல சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். இதை வாரத்தில் 1 அல்லது 2 முறை செய்து வருவதன் மூலம் வறண்ட சருமம் பளபளப்பாக மாறும்.

தேன்: 

 வறண்ட சருமம் நீங்க

முதலில் தேனை எடுத்து கொண்டு, அதனுடன் நல்ல சுத்தமான பாலை சேர்த்து கலக்க வேண்டும். பின்பு அதனை வறண்ட சருமம் முழுவதும் அப்ளை செய்து விட்டு, நல்ல சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். இதனை ஒரு வாரத்தில் 1 அல்லது 2 முறை செய்து வருவதனால் வறண்ட சருமம் பளபளப்பாக மாறி விடும்.

  வெயில் காலத்தில் உடலில் அதிக வியர்க்குரு வருகிறதா.  அப்போ இதை ட்ரை பண்ணுங்க.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement