Grey Hair Turn Black Naturally in Tamil
இக்காலத்தில் எல்லாம் சிறு வயதிலேயே தலைமுடி நரைக்க தொடங்கிவிடுகிறது. இதனை போக்க நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து இருப்போம். ஆனால் என்ன செய்வது எதுவும் நமக்கு அந்த அளவிற்கு பயன் அளித்திருக்காது. இந்த நரைமுடி பிரச்சனையால் தினமும் பெரும்பாலானவர் மிகவும் கவலை அடைகிறார்கள். வெளியில் செல்வதற்கு கூட அவர்கள் யோசிப்பார்கள். எனவே மிகவும் எளிமையான முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற என்ன செய்வது என்று பலரும் யோசித்து கொண்டிருப்போம். உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லாமல் நரைமுடியை எப்படி கருமையாக மாற்றுவது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
How To Turn Grey Hair to Black Naturally at Home in Tamil:
தேவையான பொருட்கள்:
- மிளகு (சிறிதளவு)
- தயிர்
- தண்ணீர்
இந்த மூன்று பொருட்களையும் உங்கள் முடியில் நீளத்திற்கு ஏற்றவாறும் அடர்த்திக்கு ஏற்றவாறும் எடுத்து கொள்ளுங்கள்.
நரைமுடி கருப்பாக மாற:
முதலில் மிளகை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து இதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் தலையில் நரைமுடி உள்ள இடங்களில் தேய்த்து 15 நிமிடம் வரை ஊற விடுங்கள்.
அதன் பிறகு சிகைக்காய் தேய்த்து தலையை நன்றாக அலசி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நரைமுடி எளிதில் கருமையாக மாறிவிடும்.
இதனையும் பயன்படுத்தலாம்:
முதலில் ஒரு கிண்ணத்தில் உங்கள் முடியின் அளவிற்கு ஏற்றவாறு தேங்காய் எண்ணெய்யை எடுத்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் தலையில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள். அதன் பிறகு சிகைக்காய் கொண்டு தலை குளித்து விடுங்கள்.
இதனை நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் நரைமுடி கருப்பாக மாறுவதை நிங்களே பார்க்கலாம்.
முகத்தில் உள்ள எல்லா பருக்களும் ஒரே இரவில் முழுசா போகணுமா.. அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |