முடி கொட்டுன இரண்டே வாரத்தில் இடுப்பிற்கு கீழ் தலைமுடி வளர கற்றாழை ஒன்று போதும்.! எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..?

Advertisement

How To Grow Natural Hair With Aloe Vera in Tamil

பல பேருக்கு முடி அதிகமாக உதிர்ந்து கொண்டே இருக்கும். தலைவாறும் போதும் குளிக்கும் போதும் கொத்து கொத்தாக முடி உதிர்ந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் முடியின் நுனிபகுதியில் கை வைத்தால் அடியோடு முடி உதிர்ந்து வரும். எனவே இப்படி இருக்கும் நபர்கள் முடிக்கு தேவையான சில சத்துக்களை அளிக்க வேண்டும். அதாவது முடிக்கு அதிக சத்தினை அளிக்கக்கூடிய உணவு பொருட்களை நாம் அதிகமாக சாப்பிட வேண்டும். மேலும், தலையில் மசாஜ் செய்வது, இயற்கையான ஹேர் பேக் பயன்படுத்துவது போன்ற பலவற்றை செய்ய வேண்டும். ஓகே வாருங்கள், கொட்டுன முடியை வேகமாக எப்படி வளர வைப்பது என்பதை பார்க்கலாம்.

Aloe Vera for Hair Growth in Tamil:

கற்றாழை ஹேர் பேக் பயன்படுத்தவும்:

  • முதலில் கற்றாழையை எடுத்து அதன் மேற்பகுதியியல் உள்ள தோலினை நீக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு, அதன் உட்பகுதியில் உள்ள ஜெல்லினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
  • இப்போது, கற்றாழை ஜெல்லினை மிக்ஸி ஜாரில் சேர்த்து  நன்கு பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

how to grow natural hair with aloe vera in tamil

 

நீங்களே எனக்கு முடி வளந்துது போதும்னு சொல்கின்ற அளவிற்கு முடி வளர கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்..

பயன்படுத்தும் விதம்:

  • முதலில் உங்கள் முடியை சிக்கு இல்லாமல் சீவி கொள்ளுங்கள்.
  • பிறகு முடியை சிறிது சிறிதாக பிரித்து தேங்காய் எண்ணெயை முடியின் வேர்க்கால்களில் நன்றாக படும்படி அப்ளை செய்து கொள்ளுங்கள். அடுத்து முடியின் நுனிப்பகுதி வரையிலும் அப்ளை செய்து ஊறவிடுங்கள்.
  • இவ்வாறு அப்ளை செய்த பிறகு, 1 மணிநேரம் வரை வரை ஊறவிடுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த கற்றாழை பேஸ்டினை தலை முழுவதும் அப்ளை செய்து 1/2 மணிநேரம் வரை அப்படியே வைத்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு விருப்பமானால் கற்றாழையுடன் வெந்தயமும் சேர்த்து பயன்படுத்தி வரலாம்.

 முடி வளர கற்றாழை

  • அதன் பிறகு, கற்றாழை உள்ள ஷாம்பு அல்லது ஹேர் கண்டிஷனரை பயன்படுத்தி வாஷ் செய்து கொள்ளுங்கள்.
  • இதனை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தி வருவதன் மூலம் முடி நன்றாக வளர்ச்சி அடைந்து இருப்பதையும் தலையில் முடி கொட்டிய இடத்திலும் முடி முளைத்து இருப்பதையும் பார்க்கலாம்.

கற்றாழை பயன்படுத்துவதன் நன்மைகள்:

  • கற்றாழை முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புரோட்டியோலைடிக் என்சைம்  தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி முடியின் வேர்கால்களுக்கு சக்தியை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல், கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு தலையில் பொடுகு வராமல் தடுக்கிறது.
  • எனவே கற்றாழையை நாம் முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

ஒரே ஒரு அலசில் தலையில் உள்ள பேன் தொல்லை நீங்க பாட்டி சொன்ன டிப்ஸ ட்ரை பண்ணுங்க 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement