How to Use Aloe Vera Hair Dye in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றித்தான் பார்க்க போகிறோம். இந்த ஹேர் டையை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் தலைக்கு அப்ளை செய்து வந்தால் போதும் நல்ல ரிசல்ட்டை பெற முடியும். குறிப்பாக தொடர்ந்து நான்கு வாரங்கள் அப்ளை செய்தாலே போதும். உங்கள் நரை முடியில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் காணமுடியும்.
சரி வாங்க இந்த ஹேர் டை தயார் செய்யும் முறை மற்றும் இந்த ஹேர் டை தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- கற்றாழை – ஒரு மடல்
- ஓமவல்லி இலை – 15
- வெந்தயம் பவுடர் – ஒரு ஸ்பூன்
- நெல்லிக்காய் – இரண்டு ஸ்பூன்
- ஹென்னா பவுடர் – இரண்டு ஸ்பூன்
- அவுரி பவுடர் – இரண்டு ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – ஓன்று
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய..!
கற்றாழை ஹேர் டை செய்முறை:
ஒரு சிறிய கற்றாழை மடலை எடுத்துக்கொள்ளுங்கள் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமாக அலசிக்கொள்ளுங்கள்.
அதேபோல் ஓமவல்லி இலையையும் அலசவும்.
பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை தோல் நீக்க சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பின் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் நறுக்கிய கற்றாழை மற்றும் வெங்காயம், ஓமவல்லி இலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதனை வடிகட்டி சாறினை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம் பொடி, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும்.
பிறகு வடிகட்டி வைத்துள்ள தண்ணீரை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். இதனை தொடர்ந்து இரண்டு ஸ்பூன் ஹென்னா பவுடர், இரண்டு ஸ்பூன் அவுரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறுங்கள்.
கலவையானது நன்கு பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு, அடுப்பை அணைத்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும். பிறகு தலையில் அப்ளை செய்யுங்கள். தலையில் அப்ளை செய்த பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும், பிறகு வெதுவெதுப்பான நீரால் தலை அலச வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 10 ரூபாய் செலவில் வீட்டிலே வேக்ஸிங் செய்யலாம்..! எப்படி தெரியுமா..?
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |