முடியின் அதிவேக வளர்ச்சிக்கு தேங்காயை இப்படி தலைமுடிக்கு பயன்படுத்துங்க.!

Advertisement

How to Use Coconut for Hair Growth and Thickness in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முடியின் வளர்ச்சிக்கு தேங்காயை எப்படி பயன்படுத்த வேண்டும் (How to Use Coconut for Hair Growth and Thickness in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். தேங்காய் பலவிதமான வழியில் தலைமுடிக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் மற்றும் தேங்காய் தண்ணீர் இவை அனைத்தும் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தேங்காயை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம், தலைமுடியின் வேர்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. தலைமுடியின் வேர்கால்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, புரத இழப்பை தடுக்கிறது. எனவே, முடிக்கு இத்தனை நன்மைகளை அளிக்கும் தேங்காயை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

முடியின் வளர்ச்சிக்கு தேங்காயை எப்படி பயன்படுத்த வேண்டும்.?| How to Use Coconut for Hair Growth in Tamil:

How to Use Coconut for Hair Growth in Tamil

தேங்காய் பாலை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம். தேங்காய் பாலை பயன்படுத்தி தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

பயன்படுத்தும் முறை -1

கற்றாழை ஜெல் 1 கப் எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் 2 கப் தேங்காய் பாலை சேர்ந்து நன்றாக கலந்து தலையின் அடிப்படுத்தி முதல் நுணுப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்து 20 அல்லது 30 நிமிடம் வரை தலையில் அப்படியே வைத்து அதன் பிறகு, தலையை நன்றாக அலசி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தேங்காய் பால் முடிக்கு ஈரப்பத்தினை அளிக்கும். எனவே, இவை இரண்டும் கலந்து முடியின் வளர்ச்சியை அளிக்கும்.

இன்றைய தேங்காய் விலை நிலவரம்

பயன்படுத்தும் முறை -2

how to use coconut for hair in tamil

தேங்காய் பால் 1 கப் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு இவை இரண்டினையும் நன்றாக கலந்து முடியில் அப்ளை செய்து 30 நிமிடம் வரை அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு, தலைமுடியை நன்றாக அலச வேண்டும்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர தொடங்கும்.

பயன்படுத்தும் முறை -3

தேங்காய் பால் 1 கப் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இவற்றை தலைமுடியின் அடிப்பகுதி முதல் நுனிப்பகுதி வரை அப்ளை செய்து 30 நிமிடங்கள் வைத்திருந்து, அதன் பிறகு தலையை நன்றாக அலசுங்கள்.

பயன்படுத்தும் முறை -4

தேங்காய் பால் 1 கப் எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் நன்றாக கலந்து தலைமுடியின் அடிப்பகுதி வரை நுனிப்பகுதி வரை அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்ளை செய்து 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து, அதன் பிறகு தலையை அலசுங்கள்.

மேலே கூறியுள்ள முறைகளில் உங்களுக்கு விருப்பமான முறையினை தேர்வு செய்து வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வாருங்கள். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சி அதிகரிப்பதையும் முடி மென்மையாகவும் இருப்பதை காணலாம்.

தரையை தொடுகின்ற அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை சேர்த்து தடவினால் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement