இளநரை போக இதை மட்டும் செஞ்சா போதுமாம் பாட்டி சொன்ன வைத்தியம்ங்க..!

Advertisement

இளநரை நீங்க பாட்டி வைத்தியம்

இன்றைய காலத்தில் வாழும் இளம் தலைமுறையினருக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ, இல்லையோ ஆனால் நரைமுடி பிரச்சனை மட்டும் தவறாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக நிறைய நபருக்கு இளநரை பிரச்சனை தான் காணப்படுகிறது. இளநரை பிரச்சனை என்பது சத்துக்கள் பிரச்சனையினாலும் மற்றும் நமது தோல்களில் காணப்படும் நிறமி பிரச்சனையினாலும் வரக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. அந்த வகையில் இப்படிப்பட்ட இளநரை பிரச்சனையினை சரி செய்வதற்காக பலரும் என்ன என்னவோ தீர்வுகளை எல்லாம் மேற்கொள்கிறார்கள். ஆனால் அதில் முழுமையான பலன் என்பது பலருக்கும் கிடைப்பது இல்லை. அதனால் இன்று காலம் காலமாக நமது பாட்டி சொன்ன வைத்தியங்களில் ஒன்றாக இளநரை பிரச்சனையினை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இளநரை போக என்ன வழி:

தலையில் காணப்படும் இளநரையினை சரி  செய்ய பாட்டி சொன்ன வைத்தியத்தை நாம் செய்வதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • மருதாணி இலை- 1  கைப்பிடி அளவு
  • கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
  • வெந்தயம்- 1 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்- 1/2 லிட்டர்
  • தேங்காய் எண்ணெய்- 100 மில்லி

தலையில் உதிர்ந்த முடி மீண்டும் வளர பாட்டி சொன்ன வைத்தியம் என்ன தெரியுமா 

இளநரையை போக்கும் மருதாணி:

முதலில் எடுத்துவைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் மருதாணி இலையினை தண்ணீர் இல்லாத அளவிற்கு முதலில் வெயிலில் 1 அல்லது 2 நாட்கள் வரை காய வைத்து விடுங்கள்.

 இளநரையை போக்கும் மருதாணி

பின்பு காய்ந்த இரண்டு வகையான இலையினையும் தனித்தனியாக பவுடர் போல அரைத்து பவுலில் வைத்து விடுங்கள். அடுத்து வெந்தயத்தையும் தண்ணீர் இல்லாமல் பவுடர் போல அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயினை சேர்த்து நன்றாக காய விடுங்கள். அதன் பிறகு காய்ந்த தேங்காய் எண்ணையுடன் அரைத்து வைத்துள்ள 3 வகையான பொடியினையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

இளநரை போக என்ன வழி

கடாயில் உள்ள நன்றாக கொதித்த பிறகு அதனை ஆற வைத்து வடிகட்டி கொள்ளுங்கள். அடுத்து இந்த ஆறவைத்துள்ள எண்ணையில் இருந்து 100 மில்லி எண்ணெயினை தனியாக மற்றொரு பாட்டிலில் வைத்து விடுங்கள்.

கடைசியாக பாட்டிலில் உள்ள எண்ணையுடன் 100 மில்லி சாதாரண தேங்காய் எண்ணெயினை கலந்து கொள்ளுங்கள் இப்போது இளநரையினை போக்கக்கூடிய எண்ணெய் தயார்.

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மருதாணி எண்ணெயினை முடியில் தினமும் தடவி வந்தாலே போதும் விரைவில் இளநரை போய்விடும்.

செலவு செய்யாமல் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

 

Advertisement