What to Mix With Coconut Oil For Hair Growth
நம் முன்னோர்களுக்கெல்லாம் வயதானாலும் முடி உதிரவுமில்லை, நரை முடியும் ஏற்படவில்லை. ஆனால் இந்த காலத்தில் இளம் வயதினருக்கே முடி உதிர்ந்து சொட்டை ஏற்ப்டுகிறது. மேலும் நரை முடியும் பிரச்சனையும் ஏற்படுகிறது. காரணம் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையினால் ஏற்படுகிறது. சத்தான உணவுகளை சாப்பிடுவதில்லை, தண்ணீர் அதிகமாக குடிப்பதில்லை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் முடியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்காக கடையில் விற்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். அதனால் இந்த பதிவில் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் சில ஒரு பொருளை கலந்து தேய்த்தால் போதும் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். அது என்ன பொருள் என்று இந்த முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.
முடி வளர்ச்சி எண்ணெய்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேங்காய் எண்ணெய் மற்றும் கலோஞ்சி விதைகள்:

கலோஞ்சி விதையில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமாக முடி வளர்வதற்கு உதவி செய்கிறது.
ஒரு தேக்கரண்டி கலோஞ்சி விதைகளை அரைத்து கொள்ளவும். இதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து மொணன்று அப்படியே விடவும்.
மூன்று நாட்களுக்கு பிறகு இந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும். பிறகு இந்த எண்ணெயை முடிக்கு தேவையான அளவு எடுத்து லேசாக சூடுபடுத்தி கொள்ளவும். இதனை தலை முடி முழுவதும் தடவி மசாஜ் செய்து தளி தேய்த்து குளிக்கவும்.
| உங்க முடி வளர்ந்து கொண்டே போவதை நீங்கள் காண வேண்டுமா.. அப்போ முருங்கை கீரையை இப்படி பயன்படுத்துங்க |
தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி:

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. செம்பருத்திப் பூக்களை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து, முடியில் அப்ளை செய்யும் போது முடி உதிர்தலை தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றன.
ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி பூக்களை எடுத்து கழுவி வெயிலில் காய வைக்கவும். பிறகு அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும், செம்பருத்தி பூக்களை சேர்த்து கொதிக்க விடவும். செம்பருத்தி பூவின் சாயம் எண்ணெயில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு எண்ணெய் ஆறியதும் சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் வடிக்கட்டி கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலையில் தடவி ஒரு மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும். இது போல வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வர வேண்டும்.
நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |














