Milk For Skin Whitening in Tamil
நாம் அனைவருமே நம் முகத்தை அழகாகவும் வெள்ளையாகவும் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால், ஒரு சில சரும பிரச்சனைகளால் முகம் கருமையடைந்து காணப்படும். இதனால் எப்படியாவது முகத்தை வெள்ளையாக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவருமே பல்வேறு முறைகளை பின்பற்றி இருப்போம். அதேபோல், முகத்தை ஒரே வாரத்தில் வெள்ளையாக்ககூடிய முறைகளை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது, நம் வீட்டில் இருக்கக்கூடிய பாலினை கொண்டு முகத்தை எப்படி வெள்ளையாக்குவது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Use Milk For Skin Whitening in Tamil:
பயன்படுத்தும் முறை -1
தேவையான பொருட்கள்:
- பால் – 1/2 கப்
- தேன் – 1 ஸ்பூன்
ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் தேனை எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, உங்கள் முகத்தை தண்ணீர் கொண்டு கழுவி துடைத்து விட்டு இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட்டு அதன் பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் தினமும் ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி முகம் வெள்ளையாக மாறும்.
சீக்கிரம் வெள்ளையாக எலுமிச்சை சாறுடன் இந்த பொருட்களில் ஏதாவது ஒன்றை கலந்து போட்டால் போதும்..!
பயன்படுத்தும் முறை -2
தேவையான பொருட்கள்:
- பால் – 1/2 கப்
- உளுந்து மாவு – 1 ஸ்பூன்
- சர்க்கரை – 1 ஸ்பூன்
முதலில் சர்க்கரையை மாவாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் உளுந்து மாவு, சர்க்கரை தூள் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 10 அல்லது 15 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள். அதன் பிறகு லேசாக ஸ்க்ரப் செய்து முகத்தை தண்ணீரில் கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் கருமை நிறம் நீங்கி முகம் வெள்ளையாக மாறும்.
எப்படித்தான் உங்களுக்கு இவ்வளவு முடி வளந்ததுன்னு கேட்பாங்க.. நீங்கள் மட்டும் இதை செஞ்சீங்கன்னா…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |