7 நாளில் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய பாட்டி சொன்ன வைத்தியங்க..! செஞ்சா அசந்து போய்டுவீங்க..!

Advertisement

முகப்பரு நீங்க வேப்பிலை

தமிழில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். அதாவது நாம் மனதில் என்ன நினைக்கின்றோம் என்பதை நம்முடைய முகம் ஆனது மற்றவர்களுக்கு அப்படியே தெரியப்படுத்தும் என்பதே இதற்கான அர்த்தமாக உள்ளது. இப்படிப்பட்ட அம்சத்தினை கொண்டுள்ள நமது முகம் ஆனது எப்போதும் பிரகாசத்துடனும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது தான் நாம் அனைவருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் இந்த விருப்பங்கள் நிறைவேறுவதற்குள் பருக்கள் வந்து அதனை நிறைவேற விடாமல் செய்து விடும். இவ்வாறு உங்களுக்கு வரும் முகப்பருக்களை வேப்பிலை கொண்டு எவ்வாறு மறைய வைப்பது என்பது பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். ஒரு சிலருக்கு வேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்ற சந்தேகம் இருந்தால் அதனையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாட்டி வைத்தியம் முகப்பரு நீங்க:

நம்முடைய வீடுகளுக்கு அருகில் காணப்படும் வேப்பிலை ஆனது சிறந்த ஒரு கிருமி நாசியனாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த வேப்பிலையில் உள்ள சத்துக்கள் நமது முகதிக்ரு எண்ணற்ற பலன்களை அளிக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளது.

  • வேப்பிலை- 2 கொத்து
  • தயிர்- 1 ஸ்பூன்
  • அரிசி மாவு- 1 ஸ்பூன்

பாட்டி வைத்தியம் முகப்பரு நீங்க

முதலில் ஒரு மிக்சி ஜாரில் வேப்பிலை இலை மற்றும் 1 ஸ்பூன் தயிரினை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.

அதன் பிறகு அந்த பவுலில் உள்ள பொருளுடன் 1 ஸ்பூன் பச்சை அரிசி மாவினை 2 நிமிடம் வரை கலந்து விடுங்கள். இப்போது வேப்பிலை கலந்து Face Pack தயார்.

நீங்களே எனக்கு முடி வளந்துது போதும்னு சொல்கின்ற அளவிற்கு முடி வளர கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்..

பயன்படுத்தும் முறை:

 முகப்பரு நீங்க வேப்பிலை
நீங்கள் Face Pack-ஐ பயன்படுத்துவதற்கு முன்பாக முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஃபேஸ் பேக்கை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

 

 

இவ்வாறு நீங்கள் 7 நாட்கள் செய்தால் போதும் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் என அனைத்தும் மறைந்து முகம் நன்றாக பொலிவாக மாறிவிடும். அதேபோல் முகத்தில் எண்ணெய் பசை இருந்தாலும் அதனை நீக்கி விடும்.

மேலும் இவை இல்லாமல் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 முறை முகம் கழுவுவதன் மூலம் முகம் ஆனது எப்போதும் பிரசாகமாக இருக்கும்.

போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement