உதிர்ந்த முடி மீண்டும் வளருமா
நமது உடலில் உள்ள உறுப்புகள் எப்படி முக்கியமானதோ அதே அளவிற்கு தலைமுடியும் மிகவும் முக்கியம். ஏனென்றால் முடி தான் நமக்கு மேலும் சேர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் அனைவருக்கும் முடி உதிர்வு என்பது இருக்கிறது. ஆனால் இத்தகைய முடி உதிர்வு சிலருக்கு நாளடைவில் வழுக்கையாக மாறிவிடும் நிலைமையும் ஏற்படுகிறது. இவ்வாறு பல பிரச்சனை ஏற்படுவதனால் உதிர்ந்த முடி மீண்டும் வளருமா..? என்ற கேள்வி அனைவரிடத்திலும் தோன்றுகிறது. ஆகையால் இதன் படி பார்க்கும் போது முடி உதிர்ந்த மீண்டும் முடி வளருமா என்றால் கண்டிப்பாக வளரும். அந்த வகையில் இன்று உங்களுக்கு பயனளிக்கும் விதமாக தலைமுடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடி வளர பாட்டி வைத்தியம் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க பாட்டி சொன்ன வைத்தியம் என்ன என்று பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Use Onion for Hair Growth:
- செம்பருத்தி பூ- 6
- சின்ன வெங்காயம்- 5
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் முடி வளர:
சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் தலை முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடியினை வளரச் செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் முதலில் 5 வெங்காயம் மற்றும் 6 செம்பருத்தி பூ என இந்த இரண்டினையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விடுங்கள்.
அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை தலையில் முன் நெற்றி மற்றும் இதர இடங்களில் முடி உதிர்வு இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து அதனை தலை குளித்து சுத்தம் செய்து விடுங்கள்.
இதனை உங்களால் முடிந்த நேரத்தில் தொடர்ந்து செய்வதன் மூலம் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர ஆரம்பிக்கும். அதேபோல் உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
அடர்த்தியான மற்றும் கருமையான முடிக்கு இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும். பாட்டி சொன்ன வைத்தியம் இது |
முன் நெற்றியில் முடி வளர:
- கருஞ்சீரகம்– தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய்– தேவையான அளவு
இந்த இரண்டு பொருளையும் உங்களுடைய முடி உதிர்வுக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்கும் முறை:
இப்போது ஒரு கடாயில் எடுத்துவைத்துள்ள தேங்காய் எண்ணெயினை சேர்த்து அதனுடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு பின்பு ஆற வைத்து வடிகட்டி வைத்து விடுங்கள்.
அதன் பிறகு தயார் செய்த கருஞ்சீரக எண்ணெயினை இரவு தூங்க செல்வதற்கு முன்பாக முடி உதிர்ந்த இடத்தில் அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் தலை கூட குளித்து விடலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டினையும் வாரம் 1 முறை மாறி மாறி செய்து வருவதன் மூலம் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடி கட்டுக்கடங்காத அளவில் வளர ஆரம்பித்து விடும்.
செலவு செய்யாமல் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |