முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமா.!

Advertisement

Instant Face Glow Pack at Home

பெண்கள் தங்களின் முகத்தை அழகாக வைத்து கொள்வதற்காக காசு கொடுத்து கிரீம்களை வாங்கி அப்ளை செய்கின்றனர். ஆனால் இது மாதிரி கிரீம் அப்ளை செய்ததும், சிறிது நேரத்திலே முகத்தின் பளபளப்பு குறைய ஆரம்பித்து விடும். மேலும் ஏதவாது சுப நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் பார்லருக்கு சென்று தன்னை அழகுபடுத்தி கொள்வார்கள். இப்படி செய்தாலும் சிறிது நேரத்திற்கு மட்டுமே உங்களின் முகம் பிரகாசமாக இருக்கும். அதனால் நிரந்தரமாக முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கையான முறையே சிறந்தது. அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி.?

தேவையான பொருட்கள்:

  • மைசூர் தால்- 1/4 கப்
  • கடலை பருப்பு- /4 கப்
  • ஓட்ஸ்- /4 கப்
  • எள்- 2 தேக்கரண்டி
  • அரிசி- /4 கப்
  • பாதாம்-10

பேக் செய்முறை:

ubtan face mask at home in tamil

ஒரு கடாயில் மைசூர் தால், கடலை பருப்பு, ஓட்ஸ், எள், அரிசி, பாதாம்  போன்றவை சேர்த்து சிவந்த நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

சிவந்த நிறம் வந்ததும் அடுப்பை அணைத்து வதக்கிய பொருட்களை ஆற விடவும். பிறகு ஆறியதும், மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீரில் ஊற்றாமல் பவுடராக அரைத்து கொள்ளவும்.

ஒரு பவுல் எடுத்து செய்து வைத்துள்ள பவுடரிலிருந்து 1 தேக்கரண்டி, தயிர் 1 தேக்கரண்டி, தேன் 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

Face Whitening Pack:

தேவையான பொருட்கள்:

  • முல்தானி மெட்டி- 2 தேக்கரண்டி
  • தேன்-1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
  • கற்றாழை ஜெல்- 1 தேக்கரண்டி
  • பீட்ரூட் ஜூஸ்- 2 தேக்கரண்டி

பேக் செயமுறை:

ubtan face mask at home in tamil

ஒரு பவுலில் மேல் கூறிய பொருட்கள் அனைத்தயும் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள இரண்டு பேக்குகளில் ஏதாவது ஒரு பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement