Kadalai Maavu Face Pack Tamil
அழகான மற்றும் பொலிவான சருமம் எந்த வயதாக இருந்தாலும் இருக்க வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை அனைவருக்கும் தோன்றுவது இயல்பான ஒன்று தான். அப்படி பார்த்தால் நம்முடைய வயது ஆக ஆக நம்முடைய சருமத்திலும் சில மாற்றங்கள் காணப்படும். அத்தகைய மாற்றங்கள் அனைத்தும் ஹார்மோன் மாற்றங்களாக மட்டும் இருந்தால் பிரச்சனை கிடையாது. ஏனென்றால் அது எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான். ஆனால் இவ்வாறு இல்லாமல் பருக்கள், எண்ணெய் பசை, கரும்புள்ளி மற்றும் பொலிவிழந்த முகம் என இதடுபோன்ற பிரச்சனைகள் காணப்பட்டால் அதனை அப்படியே விட முடியாது. ஏனென்றால் இந்த பிரச்சனைகள் எல்லாம் நமக்கு அதிகமாகி கொண்டே போகும் நிலை கூட ஏற்படலாம். ஆகையால் ஒன்று நமது முகம் எப்போதும் அழகாகவும், பொலிவாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கடலை மாவு அழகு குறிப்புகள்:
நமது முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது முகத்தில் காணப்படும் எண்ணெய் பசையே. இவ்வாறு எண்ணெய் பசை வருவதனால் முகம் பொலிவிழந்து காணப்பட்டு அழகும் போய் விடுகிறது.
எனவே இந்த பிரச்ச்சனை இல்லாமல் இருக்க கடலை மாவு அழகு குறிப்பு செய்தால் போதும்.
தேவையான பொருட்கள்:
- தயிர்
- எலுமிச்சை சாறு
- கடலை மாவு
இப்போது ஒரு பவுலில் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். 5 நிமிடம் கழித்து அதனை அப்படியே மூடி 10 நிமிடம் வரை வைத்து விடுங்கள்.
இப்போது உங்களது முகத்தை அழகாக மாற்றக்கூடிய கடலை மாவு Face Pack தயார்.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Face Pack-ஐ நன்றாக முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தினை கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் செய்தால் முகத்தில் காணப்படும் எண்ணெய் பசை அனைத்தும் நீங்கி முகம் அழகாகவும், பொலிவுடனும் வைக்கும்.
இந்த குளிர்காலத்திலும் உங்க முகம் வெள்ளி கிண்ணம் போல் ஜொலிக்கணுமா
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |