முகம் பளபளப்பாக
பொதுவாக தங்களின் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதிலும் சுப நிகழ்ச்சிகள் அல்லது விழாக்கள் வந்தால் த்ரெடிங் பண்ணனும், பேஷியல் பண்ணனும் என்று தான் நினைப்போம். ஏனென்றால் அன்றைய நாள் நாம் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் இப்படி நீங்கள் காசு கொடுத்து செலவு செய்தாலும் அன்றைய ஒரு நாள் மட்டும் தான் முகம் அழகாக இருக்கும். மறுநாளே முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் தான் இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பது நல்லது. இயற்கையான முறையை தேர்ந்தெடுக்கும் பொழுது உடனே உடனே ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியாது. நிரந்தரமான ரிசல்ட்டை பெற நினைத்தால் தொடர்ந்து அப்பளை செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் அருமையான பேக்கை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கடலை மாவு பேஸ் பேக்:1
ஒரு பவுலில் கடலை மாவு 2 தேக்கரண்டி, தயிர் 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
ஒருவேளை உங்களுக்கு எலுமிச்சை சாறு முகத்திற்கு செட் ஆகாது என்று நினைத்தால் கடலை மாவு மற்றும் தயிர் மட்டும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இடுப்புக்கு கீழே முடி வளரணுமா.! அப்போ இந்த எண்ணெயை தடவி பாருங்க..
கடலை மாவு பேஸ் பேக்:2
ஒரு பவுலில் கடலை மாவு 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, பால் தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக அப்ளை செய்து கொள்ளவும்.
இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கடலை மாவு முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது, மஞ்சள் தூள் ஆனது ஆன்டி பாக்ட்ரியாவாக செயல்படுகிறது. அதனால் உங்க முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |