Kai Kaal Muttiyil Ulla Karumai Neenga Tips
நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை இருக்கும். அதாவது எப்போதும் நம்மை பார்த்து மற்றவர்கள் நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றிர்கள் என்று கூற வேண்டும் என்பது தான். அப்படி அவர்கள் கூறியவுடன் நாம் நமது அழகின் ரகசியத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒரு சிலரின் ஆசையாக இருக்கும். அப்படி நம்மை பார்த்து மற்றவர்கள் நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றிர்கள் என்று கூறுவதற்கு முதன்மை காரணமாக அமைவது நமது சருமம் தான். அதனால் நமது சருமத்தை எப்பொழுதும் பார்ப்பதற்கு அழகாவும் பொலிவுடன் இருக்க வேண்டும் அல்லவா..? ஆனால் ஒரு சிலருக்கு கை மற்றும் கால்களின் முட்டியில் மிகவும் கருமையாக இருக்கும். அதனை போக்குவதற்கு நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் சில நாட்களுக்கே பலன் அளிக்கும் அதன் பிறகு பலனில்லாமல் போகிவிடும். அதற்காக தான் இன்று இயற்கையின் முறையில் உங்களின் கை மற்றும் கால்களின் முட்டியில் உள்ள கருமையினை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெற்று கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Reduce Darkness of Hands in Tamil:
இயற்கையின் முறையில் உங்களின் கை மற்றும் கால்களின் முட்டியில் உள்ள கருமையினை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
முதலில் இந்த குறிப்பிற்க்கு தேவையான பொருட்களை பார்க்கலாம் வாங்க.
- ஆரஞ்சு பழத்தோல் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழசாறு – 2 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
ஒல்லியாக உள்ள முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர பாட்டி கூறிய ரகசியம்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழத்தோல் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து கொள்ளவும்:
பிறகு அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
செலவு செய்யாமல் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்
பேக்கிங் சோடாவை கலக்கவும்:
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
பிறகு அதனை உங்களின் கை மற்றும் கால் முட்டியில் எங்கெல்லாம் கருமையாக உள்ளதோ அங்கெல்லாம் அதனை தடவி 15 முதல் 20 நிமிடம் நன்கு உளரவிடுங்கள்.
பிறகு நன்கு குளிர்ச்சியான நீரை பயன்படுத்தி கழுவி கொள்ளுங்கள். இதனை வாரம் இருமுறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் கை மற்றும் கால் முட்டியில் உள்ள கருமை அனைத்தும் முற்றிலும் நீங்குவதை நீங்களே காணலாம்.
முகம் எப்போதும் பளபளப்பாக வச்சுக்க பாட்டி சொன்ன ரகசியம் என்னன்னு தெரியுமா
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |