கைமுட்டி மற்றும் கால்முட்டிகளில் இருக்கும் கருமையை நீக்க வீட்டு வைத்தியம்

Advertisement

கைமுட்டி கருமை நீங்க 

அனைவரும் முகத்தை தான் பார்த்து பார்த்து அழகு படுத்துகிறோம். முகம் வெண்மையாக இருப்பதற்காக பல பொருட்களை பயன்படுத்தி வருவோம். ஆனால் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கும், கைகளுக்கும் கொடுப்பதில்லை. பலபேருக்கு முகம் மட்டும் வெண்மையாக இருக்கும் ஆனால் கால்கள் அதற்கு எதிர்மறையாக இருக்கும்.

முகம் வெண்மையாக இருந்து கால்கள் மட்டும் கருப்பாக இருந்தால் அது பார்ப்பதற்கு அழகாக இருக்காது. இதனை சரிசெய்ய பல பெண்கள் பார்லருக்கு செல்வார்கள். ஆனால் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி முட்டிகளில் இருக்கும் கருமையை நீக்கலாம் அது எப்படி என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கைமுட்டி கருமை நீங்க:

கைமுட்டி கருமை நீங்க

ஒரு பவுல் எடுத்து கொள்ளவும், அதில் 1 டீஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் தூள், சந்தன தூள், ஒரு  சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இதனை முட்டிகளில் கருமையான இடத்தில் அப்ளை  செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து அதன் பிறகு கையை கழுவி விட வேண்டும். இந்த குறிப்பை ஒரு மாதத்திற்கு தினந்தோறும் பயன்படுத்தி வந்தால் முட்டிகளில் உள்ள கருமை நீங்கிவிடும்.

ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். இதன் ஒரு பகுதியை கருமையாக உள்ள இடத்தில் 5 நிமிடம் தேய்க்க வேண்டும். இதனை அப்படியே 3 மணி நேரம் விட வேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு ஈரத்தை துடைத்து விட்டு தேங்காய் எண்ணெய் அப்ளை செய்ய வேண்டும்.

கண்ணில் உள்ள கருவளையம் நீங்க கிராமத்து ரெமிடி ட்ரை பண்ணுங்க

காலில் உள்ள கருமை நீங்க:

கைமுட்டி கருமை நீங்க

இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் சிறிதளவுஉப்பு, பேக்கிங் சோடா சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரில்  காலை 1/2  மணி நேரத்திற்கு அப்படியே விட வேண்டும். அதன் பிறகு காலில் பாதி எலுமிச்சை பயன்படுத்தி 10 நிமிடத்திற்க்கு தேய்க்க வேண்டும்.

அதன் பிறகு காலை வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். காலின் ஈரப்பதத்தை துடைத்து விட்டு தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும்.

இது போல நீங்கள் தொடந்து ஒரு மாதம் செய்து வந்தால் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கி பளபளப்பாக மாறிவிடும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement