கழுத்தில் உள்ள கருமை நீங்க
இன்றைய கால பெண்களுக்கு கழுத்தில் கருமை வருவது இயல்பாக மாறவிட்டது. சூரிய கதிர்களால் தோல் அழற்சி, கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம் மற்றும் உணவுப் பற்றாக்குறை இது போன்ற காரணங்களால கழுத்தில் கருமை ஏற்படுகிறது. அதனால் கழுத்தில் ஏற்படும் கருமையை சரி செய்வதற்கு இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
எலுமிச்சை சாறு :
முதலில் தயிர், எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவை இந்த மூன்று பொருளையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு கழுத்தில் கருமை உள்ள இடத்தில் கலந்து வைத்த பேஸ்ட்டை அப்ளை செய்து கொள்ளவும். பிறகு இதை 30 நிமிடம் அப்படியே வைத்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதை செய்வதால் கழுத்தில் உள்ள கருமை நீங்கி விடும்.
கழுத்தில் இருக்கும் கருமையை போக்க..!
நல்லெண்ணெய் :
முதலில் நல்லெண்ணெய் அரை சூடாக எடுத்து கொள்ளவும். பிறகு அரை சூடான நல்லெண்ணெயை கழுத்தில் உள்ள கருமையில் மசாஜ் செய்து வரவும். இதை 15 நிமிடம் அப்படியே வைத்து, நல்ல குளிர்ந்த நீரில் கழுவினால் கழுத்தில் ஏற்பட்ட சுருக்கம், கருமை முற்றிலும் நீங்கி விடும்.
தக்காளி பழம் :
முதலில் எலுமிச்சை பழம், தக்காளி பழம் மற்றும் சீனி போன்ற மூன்று பொருளையும் எடுத்து கொள்ளவும். பிறகு கழுத்தில் கருமை உள்ள இடத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து கழுத்தை துடைத்து விட்டு, அதன் பின் தக்காளி பழத்தின் மேல் சீனியை தூவி, இதனை கழுத்தில் மசாஜ் செய்து வரவும். இதனை வாரத்திற்கு 1 முறை செய்து வருவதால் கழுத்தில் இருக்கும் கருமை படிப்படியாக நீங்கி விடும்.
இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..! கழுத்து பகுதியில் இருக்கும் கருமை காணாமல் போய்விடும்..!
கற்றாழை ஜெல் :
முதலில் கற்றாழையின் உள்ள ஜெல்லை நன்றாக அலசி எடுத்து கொள்ளவும். பிறகு அதனை கழுத்தில் உள்ள கருமையில் கற்றாழை ஜெல்லை எடுத்து மசாஜ் செய்து வரவும். இதனை 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை 5 நாட்கள் தொடர்ந்து இந்த முறை செய்வதனால் கழுத்தில் உள்ள கருமை படிப்படியாக நீங்கி விடும்.
பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடா 2 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும். பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும். கழுத்தில் உள்ள கருமையில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்து வருவதால் கழுத்தில் ஏதேனும் பாக்டீரியாக்கள் இருந்தால் நீங்கி விடும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வருவதால் கருமை நீங்கி விடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |