தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை கலந்து தலையில் தடவுங்க.. அப்புறம் எல்லாரும் கேட்பாங்க என்னா எண்ணெய் தடவுற அப்படின்னு..

Advertisement

முடி வளர்ச்சியை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும்

பெண்களும் சரி ஆண்களும் முடியை சரியாக பராமரிப்பதில்லை. திருமண வயது வரும் போது தான் முடியை நினைத்து கவலை அடைகின்றனர். அதே போல் ஆண்கள் தலையில் முடி முழுவதும் உதிர்ந்து சொட்டை தலை வெளியே தெரிந்த பிறகு தான் கவலை அடைகின்றனர். முடி உதிராமல் இருக்க வேண்டுமென்றால் முடியை சரியாக பராமரிக்க வேண்டும். சரியாக நீங்கள் பராமரிக்கும் போது தான் தலை முடியில் என்ன நடக்கிறது என்று உங்களால் அறிந்து கொள்ள முடியும். அதே போல இந்த பதிவில் இயற்கையான முறையில் தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை கலந்து தேய்த்தால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வளர்ச்சியை அதிகப்படுத்த தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் மற்றும் கரிசலாங்கண்ணி:

தேங்காய் எண்ணெய் மற்றும் கரிசலாங்கண்ணி

Method: 1

முதலில் கரிசலாங்கண்ணி கீரையை நன்றாக கழுவி விட்டு ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும். இதனை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். பின் அதில் அரைத்து வைத்த கரிசலாங்கண்ணியை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெயானது நன்றாக கொதித்து நிறம் மாறும், அப்போது அடுப்பை அணைத்து விடவும்.

இந்த எண்ணெய் ஆறிய பிறகு வடிக்கட்டியை பயன்படுத்தி எண்ணெயை சக்கை இல்லாமல் வெறும் எண்ணெயை மட்டும் எடுத்து ஸ்டோர் செய்து கொள்ளவும். இந்த எண்ணெயை நீங்கள் தேங்காய் எண்ணெய் தடவுவது போல் தினமும் தடவி வந்தால் முடி வளர்ச்சியும் ஆரம்பிக்கும், முடியும் கருப்பாக இருக்கும்.

Method: 2

உங்களுக்கு method 1-ல் கூறியதை செய்ய நேரமில்லை என்றால் இந்த Method-யை ட்ரை செய்து பாருங்க.

கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து கழுவி கொள்ளவும். இதனை பேஸ்ட்டாக அரைத்து எடுத்து கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். இதனை வெயிலில் 2 நாட்களுக்கு காய வைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொள்ளவும். இந்த எண்ணெயை பயன்படுத்தி தினமும் தலையில் தடவி வர வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள இரண்டு முறைகளில் எதை ட்ரை செய்தாலும் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். அதுமட்டுமில்லாமல் முடி கருமையாகவே காட்சியளிக்கும்.

கரிசலாங்கண்ணியில் சோடியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, கால்சியம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பொடுகு பிரச்சனையை சரி செய்யவும், முடியை கருமையாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது. 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement