கருஞ்சீரகம் ஹேர் டை – Karunjeeragam Hair Dye in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு வெள்ளைமுடியை கருப்பாக மாற்றுவது எப்படி, எப்பொழுதும் வெள்ளை முடி வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம். பொதுவாக அனைவரது மனதிலும் வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் வெள்ளை முடி வருவதற்கான உண்மையான காரணம் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. அதுமட்டுமல்லாமல் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங்கள் உள்ளன.
இத்தகைய காரணங்கள் சரியாக தெரியாததால் தான், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வெள்ளை முடி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. குறிப்பாக மரபணு, வைட்டமின் குறைபாடு, தைராய்டு, மனம் அழுத்தம், புகைபிடித்தல், கெமிக்கல் நிறைந்த பொருட்களை தலைமுடிக்கு அதிகமாக பயடுத்துதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வெள்ளை முடி மறைய நாம் இயற்கையான வழிமுறையை பயன்படுத்தினால் நல்ல பலன்களை பெறுவதுடன், எந்த ஒரு பக்கவிளைவுகளை நாம் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவும் இயற்கையன முறையில் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம் என்று பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- கருஞ்சீரகம் – இரண்டு ஸ்பூன்
- வெந்தயம் – ஒரு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
- வைட்டமின் ஈ கேப்சூல் – ஒன்று
- இரும்பு வாணலி – ஒன்று
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100% நரைமுடி கருமையாக இயற்கை ஹேர் டை செய்முறை..!
கருஞ்சீரகம் ஹேர் டை செய்முறை – Karunjeeragam Hair Dye in Tamil :
அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து சூடுபடுத்தவும், வாணலி நன்கு சூடானதும் இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தையம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். வெந்தயமானது நன்கு கருகும் வரை வறுக்க வேண்டும்.
பின் வறுத்த பொருளை நன்கு ஆறவைத்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் பொடிதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அரைத்த பொருளை ஒரு பவுளிற்கு பற்றிக்கொள்ளுங்கள் பின் அவற்றில் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் அல்லது கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
பிறகு அதனுடன் ஒரு வைட்டமின் ஈ கேப்சூல் ஆயிலை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்தால் போதும் வெள்ளை முடியை நிரந்தரமாக மாற்றக்கூடிய ஹேர் டை தயார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரிப்பு முறை.. மாதம் 2 முறை போதும் முடி கருப்பாகவே இருக்கும்
அப்ளை செய்யும் முறை:
தலைமுடியில் எங்கெல்லாம் வெள்ளை முடி இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த ஹேர் டையை அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும், பின் வழக்கம்போல் நீங்கள் தலைக்கு எந்த ஷாம்பு பயன்படுத்துவீர்களோ அதனை பயன்படுத்தி தலை அலசலாம்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வந்தாலே போதும் மூன்று மாதங்களுக்குள் வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |