உங்கள் முடி பளபளன்னு அடர்த்தியா வளரணுமா? அப்போ கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்..!

Advertisement

Karuveppilai Hair Pack in Tamil

உங்கள் முடி நன்கு பளபளன்னு மற்றும் கருமை நிறத்துடன் அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்படி வளர வேண்டும் என்று ஏராளமான டிப்ஸினை பாலோ செய்துள்ளீர்களா? இருப்பினும் அவை எல்லாம் உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுத்தது இல்லையா? இனி அந்த கவலையை விடுங்கள்..

இங்கு தலை முடி அடர்த்தியாக நல்ல கருமை நிறத்துடன் குறிப்பாக முடி பளபளன்னு வளர நமக்கு எளிதில் கிடைக்கும் கருவேப்பிலையை நான்கு வழிகளில் பயன்படுத்து முறையை பற்றி தான் கூறியுள்ளோம். ஆக அவற்றில் உங்களுக்கு எந்த முறை ஏற்றதாக இருக்குமோ அதனை தேர்வு செய்து தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த கருமையான மற்றும் அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடியை பெற முடியும்.

சரி வாங்க அந்த நான்கு வழிகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கருவேப்பிலை:

கருவேப்பிலை

பொதுவாக பெண்கள் அடர்த்தியான, கருமையான மற்றும் பளபளப்பான முடியை தான் விரும்புவார்கள் ஆனால் இன்றைய சூழ்நிலையில் பலரும் முடி உதிர்தல், அடர்த்தி குறைவு, பொடுகு மற்றும் நரைமுடி பிரச்சனை என்று பல வகையான பிரச்சனைகளை தினமும் சந்தித்து கொண்டு தான் வருகிறார்கள். ஆக அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடியை பெற சில இயற்கை பொருட்கள் உதவுகின்றது. குறிப்பாக முடி பராமரிப்பு என்று வரும் போது கருவேப்பிலை முதன்மையானது. அடர்த்தியான முடி மற்றும் முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பண்புகள் கருவேப்பிலையை அதிகம் உள்ளது. அந்த வகையில் முடி வளர்ச்சிக்கு கருவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கூந்தல் வளர்ச்சிக்கு வீட்டிலே இயற்கையான கற்றாழை ஹேர் ஆயில்

டிப்ஸ்: 1

ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலையை எடுத்து அதனை கெட்டியாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு தேக்கரண்டி அரைத்த கருவேப்பிலை விழுதை இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள் கொள்ளவும்.

பிறகு இந்த கலவையை உங்கள் தலை முடியில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் தலைக்கு கொஞ்சம் மசாஜ் செய்து பிறகு 30 நிமிடம் வரை காத்திருக்கவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு எப்பொழுதும் போல நீங்கள் பயன்படுத்து ஷாம்பை பயன்படுத்தி தலை அலசலாம்.

இந்த முறையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தி வர தலை முடி நன்கு போஷாக்குடன், அடர்த்தியாக, கருமையாக மற்றும் பளபளப்பாக வளரும்.

டிப்ஸ்: 2

½ கப் கறிவேப்பிலையுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அதனுடன் ஒரு முழு நெல்லிக்காயை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் தலை முழுவதும் அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பிறகு தலை முடியை சாதாரண நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இந்த முறையை வாரத்தில் இரு செய்து வரலாம். இவ்வாறு செய்து வருவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

டிப்ஸ்: 3 (Karuveppilai Hair Oil in Tamil)

கருவேப்பிலை எண்ணெய் தயார் செய்யும் முறை – அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும், எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலையை சேர்த்து நன்கு பொரியவிடவும். கருவேப்பிலையின் சாறு எண்ணெயில் சேர்த்து எண்ணெயின் நிறம் பச்சை நிறமாக மாறிய பிறகு அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடுங்கள். எண்ணெய் ஆறியதும் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி தினமும் கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தி வரலாம். இந்த முறை நல்ல பலன் தரும் மற்றும் எளிதானனும் கூட.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
15 நாளில் கொட்டிய முடி வளர இத மட்டும் செய்ங்க

டிப்ஸ்: 4

இரண்டு கைப்பிடியளவு கருவேப்பிலையை எடுத்து எடுத்துக்கொள்ளுங்கள் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் ஐந்து ஸ்பூன் சின்ன வெங்காயத்தின் சாறினை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இந்த கலவையை தலையில் நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நிறம் வரை காத்திருக்க வேண்டும். பிறகு தலைக்கு ஷாம்பு போட்டு அலசலாம். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர கருமையாக, அடர்த்தியாக மற்றும் பளபளப்பாக வளரும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement