Kerala Special Herbal Oil At Home
ஹலோ நண்பர்களே..! பொதுவாக பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக அவர்கள் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. அதனால் பெண்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக இந்த பதிவில் ஒரு அருமையான எண்ணெயை பற்றி தான் கூறப்போகிறேன். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Kerala Special Herbal Oil At Home in Tamil:
- தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
- மருதாணி இலை – சிறிதளவு
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- சின்ன வெங்காயம் – 10
- செம்பருத்தி இலை – சிறிதளவு
- செம்பருத்தி பூ – 6
- நெல்லிக்காய் – 6
- கடுகு – 1 ஸ்பூன்
- கிராம்பு – 4
- மிளகு – 6
- பாதாம் – 1/4 கப்
- வெந்தயம் – 1/2 கப்
இந்த Summer சீசனிலும் உங்க முகம் பளபளப்பாக இருக்க காபி தூளை இப்படி பயன்படுத்துங்க |
கேரளா பெண்களின் ரகசிய எண்ணெய்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் கிராம்பு, மிளகு, கடுகு சேர்த்து கொள்ளுங்கள். பின் அதில் நெல்லிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து கொள்ளவும்.
பின் அதில் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ளவும். பின் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
அடுத்து வெந்தயம் மற்றும் பாதாமை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ள வேண்டும். பின் அதை நாம் அரைத்து வைத்துள்ள கலவையுடன் சேர்த்து அரைக்க வேண்டும். பின் இவற்றை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுத்து அதே மிக்சி ஜாரில் கருவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை, செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூ இவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க
கடாயை அடுப்பில் வைக்கவும்:
பின் ஒரே கடாயை அடுப்பில் வைத்து அதில் உங்களுக்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். பின் எண்ணெய் சூடானதும் நாம் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கொள்ள வேண்டும்.
எண்ணெயை நன்றாக கொதிக்க விட வேண்டும். எண்ணெய் கொதித்து எண்ணெயின் நிறம் மாறியதும் அதை அடுப்பில் இறக்கி ஆறவிட வேண்டும்.
அவ்வளவு தான் எண்ணெய் தயார். இந்த எண்ணெயை ஓரு பாட்டிலில் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல உங்கள் முடியின் வேர் பகுதியில் இருந்து முடியின் நுனி பகுதி வரை நன்றாக தடவ வேண்டும். இதுபோல தொடர்ந்து தடவி வந்தால் உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |