கருமை நீங்க பாட்டி வைத்தியம்
தன்னை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை செலுத்துகின்றனர். அதற்காக முகத்தை மட்டும் அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். கை மற்றும் கால், அக்குள் போன்ற பகுதியில் இருக்கும் கருமைகளை மறந்து விடுகின்றனர். ஆரம்பத்தில் சிறியதாக கருமை வரும் போதே அதனை கவனிக்க மாட்டார்கள். யாராவது அதை பார்த்து என்னது முட்டி இப்படி கருப்பா இருக்கிறது என்று சொன்னவுடன் தான் அதற்கான முயற்சிகளை எடுக்கின்றனர். இதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதனால் தான் இந்த பதிவில் கருமை நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முட்டி கருமை நீங்க:
தயிர் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்:

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை கருமை எந்தெந்த இடத்தில் இருக்கின்றதோ அதில் அப்பளை செய்து கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடவும். இதனை தினமும் செய்து வந்தால் கருமை நீங்கி விடும்.
தயிரானது மாய்சரைசர் ஆக செயல்பட்டு கருமையை நீக்கி பளபளப்பாக மாற்றுகிறது.
கை முட்டியில் இருக்கும் கருமை நீங்க பாட்டி சொன்ன இந்த ரகசியத்தை செஞ்சா போதும்..!
எலுமிச்சை சாறு பேக்:

ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு சிறிதளவு, மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, வெள்ளரிக்காய் பேஸ்ட் சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இதனை கருமையாக உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 இமிடம் வைத்திருந்து பிறகு கழுவ வேண்டும். இது போல் தினமும் செய்து வந்தால் கருமை நீங்கி விடும்.
எலுமிச்சை சாறு தோலின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது, மஞ்சள் தூள் ஆன்டி பாக்ட்ரியாவாக செயல்பட்டு தோலிலுள்ள கிருமிகளை நீக்கி நிறத்தை அதிகரிக்கிறது.
உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கை கனமாக வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும். இதனை கருமையாக உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்யவும்.
அடுத்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கருமையாக உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை அப்ளை செய்து கொண்டு தூங்க வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதவாது ஒன்றை தினமும் பயன்படுத்தி வந்தாலே கருமை நீங்கி விடும். அது போல கை முட்டி கால் முட்டி கருமைக்கு மட்டும் தான் அப்ளை செய்ய வேண்டும் என்றில்லை. உங்களது உடம்பில் எங்கெல்லாம் கருமையாக இருக்கிறதோ அங்கெல்லாம் அப்ளை செய்யலாம்.
பெண்களே முகத்தில் இருக்கும் முடி நீங்க பாட்டி சொன்ன வைத்தியம் என்னன்னு தெரியுமா
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














