கூட்டு குடும்ப ஒற்றுமை
கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் என இவர்கள் மட்டும் ஒரு குடும்பமாக வாழ்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அதிகமாக யாரும் கூட்டு குடும்ப வாழ்க்கையினை வாழ விரும்புவது இல்லை. ஏனென்றால் கூட்டு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் பலரும் இதனை விரும்ப மாட்டார்கள். அந்த வகையில் இத்தகைய கருத்தினை பலரும் நினைத்தாலும் கூட இன்றைய காலகட்டங்களில் கூட்டு குடும்ப வாழ்க்கை என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. அதிலும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள். அதிலும் சிலர் அழகான கூட்டு குடும்ப வாழ்க்கை இருந்துமே தனிக்குடும்ப வாழ்க்கையினை வாழுகிறார்கள். ஆகவே இன்றைய பதிவில் கூட்டு குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சண்டை இல்லா மகிழ்ச்சியான கூட்டு குடும்ப வாழ்க்கை வாழ டிப்ஸ்:
வெளிப்படையான பேச்சு:
பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு கருத்துகள் மனதில் தோன்றும். ஆகாயல் கூட்டு குடும்பம் மத்தியில் நீங்கள் வாழும் போது நீங்கள் பேச நினைக்கும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது தான் நல்லது.
இவ்வாறு பேசுவதனால் ஒருவருக்கு ஒருவர் என்ன நினைக்கிறீர்கள் என்று வெளிப்படையாக தெரிய வரும். அதில் எது மனக்கசப்புகள் வந்தாலும் அன்றே அது முடிந்து விடும்.
மரியாதை:
கூட்டு குடும்பம் எனும் போது கண்டிப்பாக வயதில் பெரியவர்கள் இருப்பார்கள். ஆகையால் அவர்களுக்கான மரியாதையை அளிக்க வேண்டும். மேலும் மற்றவர்களின் மத்தியில் விட்டு கொடுக்கலாம் குடும்பத்தின் பெயரை நிலை நிறுத்த வைக்க வேண்டும்.
ஒருவேளை உங்களுக்குள் ஏதேனும் மன வருத்தம் இருந்தாலும் அதை மற்றவர்கள் மத்தியில் காண்பிக்க கூடாது.
அனைவரும் சமம்:
குடும்பத்தில் உள்ள அனைவரும் சமம் என்று எண்ணி குடும்பத்தின் பொறுப்புகளை 5 நபர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சம அளவில் பிரித்து கொடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்கிறது என்ற எண்ணம் தோன்றும்.
மேலும் சாப்பிடும் போது எந்த பாரமபட்சமும் இல்லாமல் சம அளவில் உணவுகளை பகிர்ந்து சாப்பிடுங்கள்.
பொருளாதார நிலை:
பொருளாதார நிலை என்று வரும் போது குடும்பத்திற்காக 1 ரூபாய் செலவு செய்தாலும் அதனை வெளிப்படையாக செலவு செய்யுங்கள். அதேபோல் உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் வேண்டும் என்றாலும் அனைவரின் மத்தியில் கேட்டு பெறுங்கள்.
சண்டை:
என்ன தான் ஒற்றுமையாக வாழ்ந்தாலும் கூட சண்டை என்பது எப்போதாவது வரும். ஆகையால் இன்று ஒரு சண்டை நடக்கிறது என்றால் அதனை பெரியாதைக்காமல் அன்றே முடித்து விடுவது நல்லது.
எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்ன செய்வது
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |