கொரியன் பெண்களின் முகம் வெள்ளையாக இருப்பதற்கான ரகசியம் இது தானா..!

korean skin whitening remedies in tamil

Korean Skin Whitening Remedies 

பொதுவாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொன்றை பற்றி பெருமையாக கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் தமிழ்நாடு என்றவுடன் பெண்களின் அழகு மற்றும் வீரத்தினை பற்றி தான் கூறுவார்கள். ஆனால் தமிழ்நாட்டு பெண்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கொரியன் மற்றும் கேரளா பெண்கள் அழகாக இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் நம்மை விட மற்றொருவர் அழகாக இருந்தால் அதே போல் நாமும் அழகாக மாற வேண்டும் என்று தான் நினைப்போம். அதற்காக அவர்கள் என்ன மாதிரியான டிப்ஸ்களை எல்லாம் முகத்திற்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு பின்பற்றி வருவோம். அந்த வகையில் இன்று கொரியன் பெண்களின் முகம் வெள்ளையாக இருப்பது போல் நாமும் வெள்ளையாக மாறுவதற்கான டிப்ஸினை தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Korean Skin Care Tips at Home:

ஸ்கின் டிப்ஸ்- 1

 korean skin care tips at home in tamil

  • கற்றாழை- 1 ஸ்பூன் 
  • எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன் 
  • அரிசி கழுவும் தண்ணீர்- 2 ஸ்பூன் 

கற்றாழை ஆனதுமுகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் என அனைத்தினையும் நீக்குவதற்கு உகந்த ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் அரிசி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு  ஆனது முகத்தில் இருக்கும் அழற்சியினை நீக்கி முகம் பிரகாசமாக இருக்க உதவுகிறது. ஆகையால் மேலே சொல்லப்பட்டுள்ள 2 பொருட்களையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

முதலில் ஒரு பவுலினை எடுத்துக்கொண்டு அதில் மேலே எடுத்துவைத்துள்ள மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ள வேண்டும்.

10 நிமிடம் கழித்து தயார் செய்து வைத்துள்ள பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் கொரியன் பெண்களை போல் பளிசென்று மாறிவிடும்.

கேரளா பெண்களின் தலை முடி ரகசியம் இதுதானா! வெறும் 15 நாட்களில் முடி அடர்தியாகும் இதை ட்ரை பண்ணுங்க.. 

ஸ்கின் டிப்ஸ்- 2

korean beauty tips in tamil

  • அரிசி- தேவையான அளவு 

நாம் தினமும் அரிசி கழுவிய பிறகு கீழே ஊற்றும் தண்ணீரில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இத்தகைய தண்ணீரை நாம் நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை, அழுக்கு என அனைத்தும் நீங்கி முகம் வெள்ளையாகவும், பளிசென்றும் மாறிவிடும்.

பயன்படுத்தும் முறை:

முதல் நாள் இரவே அரிசியினை ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை கழுவி அதில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்பேரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

இப்போது இந்த ஸ்ப்ரே பாட்டிலினை 2 அல்லது 3 நாட்கள் வரை புளிக்க வைக்க வேண்டும். பின்பு ஸ்ப்ரே பாட்டிலில் இருக்கும் இந்த தண்ணீரை கொண்டு முகத்தினை கழுவி வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறிவிடும். காலை மற்றும் மாலை என இரண்டு வேலையிலும் இதனை செய்ய வேண்டும்.

கேரளா பெண்களின் அழகு ரகசியம் இது தான்.. 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil