Long and Thick Hair Growth Home Remedies
பொதுவாக சில நபருக்கு முடி நீளமாக இருக்கும், ஆனால் அடர்த்தியாக இருக்காது, இன்னும் சில நபருக்கு அடர்த்தியாக இருக்கும் நீளம் இருக்காது. அதனால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக கடையில் விற்கு, எண்ணெய் மற்றும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் இருக்கிற முடியும் உதிர செய்யும். அதனால் தான் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முடி வளர்ச்சியை எப்படி அதிகப்படுத்துவது முடிக்கு நன்மையை தரும். அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவது எப்படி என்று என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர முட்டை ஹேர் பேக்:
குறிப்பு:1
முட்டையில் புரத சத்து நிறைந்துள்ளது, இதனால் முடியை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர செய்யும்.
ஒரு பவுலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி கொள்ளவும், இதனை நன்றாக மிக்ஸ் ஆகும் வரை கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடம் வைத்திருக்கவும், பிறகு வெதுவெதுப்பான நீரில் நீங்கள் எப்பொழுதும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பை தேய்த்து குளித்து கொள்ளவும்.
குறிப்பு:2
ஒரு பவுலில் முட்டையின் மஞ்சள் கரு, 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள பேக்கை வாரத்தில் 2 முறை பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்துவதால் முடி வலிமையாக வளரவும், அடர்த்தியாக வளரவும் உதவி செய்கிறது.
அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்..
ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெயில் ஈரபதமாக்கும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, இவை தலையில் உள்ள பொடுகை நீக்கி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஒரு பாத்திரத்தில் உங்கள் முடிக்கு தேவையான அளவு ஆமணக்கு எண்ணெய் எடுத்து 10 நிமிடம் சூடுபடுத்தவும். இந்த எண்ணெயின் சூடு ஆறியதும் தலை முடியில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
பயங்கரமா முடி கொட்டுகிறதா.. கவலையை விடுங்க இதை ட்ரை பண்ணுங்க..
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வந்தால் முடியை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர செய்யலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |