முடி வளர்வதற்கு டிப்ஸ் | Long And Thick Hair Growth Tips in Tamil..!
ஹலோ மக்கள்ஸ்..! இப்போ இருக்கின்ற காலக்கட்டத்தில் எல்லாமே மாறிவிட்டது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது. இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். அவ்வளவு ஏன் நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் கூட கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. அப்படி இருக்கையில் நாம் பயன்படுத்தும் மற்ற பொருட்களில் கெமிக்கல் இல்லை என்று எப்படி சொல்வது. இவை அனைத்துமே நமக்கு தெரிந்த ஓன்று தான். இருந்தாலும் நம்மில் பலரும் கடைகளில் விற்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முடி உதிர்தல், நரைமுடி, இதுபோன்ற பல பிரச்சனைகள் உருவாகிறது. இதனை எப்படி சரி செய்வது என்று நம் எல்லாருக்குமே ஒரு குழப்பம் இருக்கும். அதனால் இந்த பதிவின் வாயிலாக முடி உதிர்வை தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Long And Thick Hair Growth Tips in Tamil:
- அரிசி – 2 டேபிள்ஸ்பூன்
- செம்பருத்தி பூ – 3
- செம்பருத்தி இலை – 10
- தண்ணீர் – தேவையான அளவு
Step -1
முதலில் 2 ஸ்பூன் அளவிற்கு அரிசி எடுத்து அதை 2 முறை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் உங்கள் முடிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
உங்க முகம் எப்படிங்க இவ்வளவு வெள்ளையாச்சு கேட்பாங்க.. பாசிப்பயிரை இப்படி பயன்படுத்தினால்..
Step -2
பிறகு அதில் நாம் கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலையை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
Step -3
மூன்று பொருட்களும் நன்றாக கொதித்து தண்ணீரின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடுங்கள். பின் ஒரு வடிகட்டியை வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.
உங்கள் ட்ரையான முடியை சாப்டாக்க இந்த ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்
அப்ளை செய்யும் முறை:
இப்போது உங்கள் தலை முடியை 2 பாதியாக பிரித்து வைத்து கொள்ளுங்கள். அடுத்து நாம் தயார் செய்து வைத்துள்ள நீரை உங்கள் முடியின் அடிப்பகுதியில் இருந்து முடியின் நுனி வரை அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
20 -லிருந்து 30 நிமிடம் வரை அப்படியே வைத்திருந்து, பின் எப்பொழுதும் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து உங்கள் தலையை அலசிக்கொள்ளுங்கள்.
இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உதிர்ந்த முடி அனைத்தும் மீண்டும் வளர்வதை காணலாம். இதில் எந்த கெமிக்கல் இல்லாததால் இது உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
உங்க முகம் எப்போதும் டல்லாவே இருக்கா.. அப்போ நீங்க இத தான் செய்யணும்.. செம ரிசல்ட் கிடைக்கும்..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |