தாறுமாறாக முடி வளர
நண்பர்களுக்கு வணக்கம்..! ஆண் பெண் இருவருக்கும் இருக்க கூடிய ஆசை என்றால் அது முடி கொட்டாமல் இருப்பது தான். அதிலும் பெண்களுக்கு முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்படி முடியை பராமரிக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் இருக்கின்ற முடியும் கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட ஆரம்பிக்கும். எனவே இனி கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிடுங்கள். இயற்கையான பொருட்களை கொண்டு முடியை பராமரியுங்கள். அதனால் இன்று நம் பதிவில் முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரச்செய்யும் ஹேர் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி கட்டுக்கடங்காமல் வளர ஹேர் பேக்:
- சாதம் வடித்த கஞ்சி – முடிக்கு தேவையான அளவு
- ஆளிவிதை – 2 ஸ்பூன்
- வெந்தயம் – 2 ஸ்பூன்
- செம்பருத்தி பூ
இன்று நாம் முடிக்கு சேர்க்கும் பொருட்கள் அனைத்துமே எந்த கெமிக்கலும் சேர்க்காத இயற்கையான பொருட்கள். அதனால் எந்த பயமும் இல்லாமல் நீங்கள் இந்த ஹேர் பேக்கை செய்து முடிக்கு பயன்படுத்தலாம்.
மழைக்காலத்திலும் உங்க முகம் பளபளப்பாக இருக்க அரிசி தண்ணீருடன் இதை சேர்த்து தடவுங்க
ஹேர் பேக் செய்யும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் உங்கள் முடிக்கு தேவையான அளவு சாதம் வடித்த கஞ்சி எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் ஆளிவிதை மற்றும் வெந்தயம் இவற்றை நன்றாக பொடியாக அரைத்து அதில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதில் 4 செம்பருத்தி பூவை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
பின் மறுநாள் காலையில் அதை நன்றாக கைகளால் கரைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் மிக்சி ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பின் அதை ஒரு காட்டன் துணியில் வைத்து சாறை மட்டும் நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி..!
தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இந்த ஒரு ஸ்ப்ரே போதும்
ஹேர் பேக் அப்ளை செய்யும் முறை:
இப்போது இந்த ஹேர் பேக்கை உங்கள் முடியில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் தலையில் எண்ணெய் தடவி, முடியில் சிக்கு இல்லாமல் எடுத்து கொள்ளுங்கள். பின் இந்த ஹேர் பேக்கை முடியின் அடிப்பகுதியில் இருந்து முடியின் நுனி வரை நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
30 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின் முடியை நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி அலசி கொள்ளுங்கள். இதுபோல வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முடி காடுபோல் வளர்வதை நீங்களே காண்பீர்கள்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |