Long Hair Growth Oil At Home Preparation in Tamil
ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் முடி நன்றாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு முடி நீளமாக வளர வேண்டும் என்ற பேராசை இருக்கும். ஆசைப்படுவது தப்பில்லை, ஆனால் அதை சரியாக பராமரிக்க வேண்டும் அல்லவா..! இன்றைய சூழ்நிலையில் முடி நீளமாக வளர வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் முடிக்கு மேலும் பாதிப்புகளை தந்து, முடி உதிர்தல், முடி வளர்ச்சியின்மை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை நினைத்து வருத்தப்படுபவர்களா நீங்கள்..? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. நாம் இன்று இந்த பதிவின் வாயிலாக தலைமுடி பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு தரும் எண்ணெய் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நீளமான கூந்தலை தரும் அற்புதமான எண்ணெய்:
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- வெந்தயம் – 1 கப்
- கருஞ்சீரகம் – 1/2 கப்
- செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- செம்பருத்தி பூ – 10
- துளசி – சிறிதளவு
- மல்லிகை பூ இலை – சிறிதளவு
- தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
வாரத்திற்கு 2 முறை தடவினால் போதும்.. கேரள பெண்களின் கூந்தலை தோற்கடிக்கும் அளவிற்கு முடி வளரும்.. |
எண்ணெய் தயாரிக்கும் முறை:
முதலில் மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில் நாம் மேல் கூறிய வேப்பிலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, வெந்தயம், கருஞ்சீரகம், துளசி, மல்லிகை பூ இலை இவற்றை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளவும். பின் அதில் நாம் அரைத்து எடுத்து வைத்துள்ளதை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
உங்கள் ட்ரையான முடியை சாப்டாக்க இந்த ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்
எண்ணெய் நன்றாக கொதித்து அதன் நிறம் மாறியதும், அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். அவ்வளவு தான், நீளமான முடி வளர்ச்சியை தரும் எண்ணெய் ரெடி.
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல உங்கள் முடியின் அடிப்பகுதியில் இருந்து நுனி பகுதி வரை நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல தினமும் பயன்படுத்தி வந்தால் முடி கட்டுக்கடங்காமல் காடுபோல் வளரும். மேலும் முடி உதிர்வு, நரைமுடி போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யும்.
உங்க முகம் எப்போதும் டல்லாவே இருக்கா.. அப்போ நீங்க இத தான் செய்யணும்.. செம ரிசல்ட் கிடைக்கும்..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |