வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இவ்ளோ முடியா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்..! அதற்கு இந்த 2 பொருளை எண்ணெயில் சேர்த்து தடவுங்க..!

Updated On: May 13, 2023 9:05 AM
Follow Us:
Long Hair Growth Oil Naturally At Home in Tamil
---Advertisement---
Advertisement

முடி வளர்ச்சிக்கு எண்ணெய் 

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம் அனைவருக்குமே உடல்ரீதியாக சில பிரச்சனைகள் இருக்கும். அதாவது முடி உதிர்வு, பொடுகு தொல்லை, நரை முடி, முகப்பருக்கள், கரும்புள்ளி போன்ற பிரச்சனைகளை தான் கூறுகின்றேன். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் இந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அதுபோல பெண்கள் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆசை முடி நீளமாக வளர வேண்டும் என்பது தான். இதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதனால் இன்று வீட்டிலேயே இயற்கையான முறையில் எண்ணெய் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Long Hair Growth Oil Naturally At Home in Tamil: 

  1. தேங்காய் எண்ணெய் – 200 ml 
  2. வெந்தயம் – 1/2 கப்
  3. கருஞ்சீரகம் – 1/2 கப்

3 மடங்கு முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் எண்ணெய்:  

venthayam karunjeeragam

 

முடியின் வளர்ச்சிக்கு நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் வெந்தயம். வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். வெந்தயம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகிறது. முடியை வலிமையாக வளர செய்கிறது. மேலும் பொடுகு பிரச்சனையை அடியோடு விரட்ட வெந்தயம் உதவுகிறது.

அடுத்து நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் கருஞ்சீரகம். கருஞ்சீரகம் முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர செய்கிறது. மேலும் இது முடியை கருமையாக வளர உதவுகிறது. அதனால் நாம் இன்று முடி வளர்ச்சி எண்ணெய்க்கு வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை 1/2 கப் அளவிற்கு எடுத்து கொள்வோம்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் 2 நாட்களில் மறைய வேண்டுமா.. அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க.. 

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்: 

3 மடங்கு முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் எண்ணெய்

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

அடுத்து கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் 200 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க விட வேண்டும். தேவை என்றால் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலையை போட்டு கொதிக்க விடலாம்.

எண்ணெய் நன்றாக கொதித்து நிறம் மாறி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பின் எண்ணெயை வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி வந்தால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!